முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். சூதாட்டம்: 3 பேர் கைது

சனிக்கிழமை, 29 மார்ச் 2025      விளையாட்டு
Jail

Source: provided

நவி மும்பையில் சன்பாடா பகுதியில் ஒரு குடியிருப்பு வளாகத்தில், ஐ.பி.எல். கிரிக்கெட் மீது பந்தயம் கட்டி, ஆன்லைன் சூதாட்டம் நடத்தப்படுவதாக மும்பை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில், சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினர், சூதாட்டத்தில் ஈடுபட்ட மூவரை கைது செய்தனர். மேலும், ரூ. 2.6 லட்சம் மதிப்பிலான மின்னணு சாதனங்களையும் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட மூவர் மீதும் மகாராஷ்டிர சூதாட்டத் தடுப்புச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், சூதாட்டத்தில் ஈடுபட்ட மற்றவர்கள் குறித்து அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறையினர் கூறினர்.

_______________________________________________________________________________

தெற்கு ஆஸ்திரேலியாவுக்கு கோப்பை

ஷெபீல்ட் ஷீல்ட் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டியாகும். இந்தியாவில் நடக்கும் ரஞ்சி கோப்பை மாதிரி பிரபலமான தொடரகும். இந்தத் தொடரில் ஆஸி.யின் 6 மாகாணங்களில் இருந்து அணிகள் விளையாடும். 10 போட்டிகளில் இந்த அணிகள் விளையாடும். இதன் இறுதிப் போட்டிகளில் தெற்கு ஆஸ்திரேலியா, குயின்ஸ்லான்ட் அணிகள் மோதின.

இதில் குயின்ஸ்லான்ட் முதலிரண்டு இன்னிங்ஸ்களில் 95, 445 ரன்கள் எடுத்தது. தெ.ஆஸி. முதலிரண்டு இன்னிங்ஸ்களில் முறையே 270, 271/6 ரன்கள் எடுத்தது. இதில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் 11 விக்கெட்டுகள் எடுத்த பிரன்டன் டாகெட் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த ஷெபீல்ட் ஷீல்ட் கோப்பையை 29 ஆண்டுகள் கழித்து தெற்கு ஆஸ்திரேலியா வென்றுள்ளது இதற்கு முன்பாக 1990-1991இல் 232/2 ரன்களை சேஸ் செய்து விக்டோரியா அணி கோப்பையை வென்றிருந்தது.

_______________________________________________________________________________

டோனி குறித்து வாட்சன் 

சேப்பாக்கில் நடந்த போட்டியில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு சி.எஸ்.கே. அணி ஆர்.சி.பி.யிடம் தோல்வியைச் சந்தித்தது. முதலில் பேட்டிங் செய்த ஆர்.சி.பி. 196/7 ரன்கள் எடுக்க அடுத்து விளையாடிய சி.எஸ்.கே. 20 ஓவர்களில்146/8 ரன்கள் எடுத்தது. இதில் டோனி 16 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து அசத்தினார். இருப்பினும் டோனி முன்னதாகவே களமிறங்கி இருக்கலாம் என்ற விமர்சனம் அவர்மீது எழுந்து வருகிறது.

இந்நிலையில்  நிகழ்ச்சி ஒன்றில் வாட்சன் பேசியதாவது: 16 பந்துகளில் 30 ரன்களை அடித்தார் டோனி. இதைப் பார்க்கதான் சி.எஸ்.கே. ரசிகர்கள் வருகிறார்கள். டோனி இன்னமும் வரிசையில் முன்னதாக களமிறங்கினால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும். எனது கருத்துபடி, அஸ்வினுக்கு முன்பாக டோனி களமிறங்கியிருக்க வேண்டும். கூடுதலாக 15 பந்துகளை டோனி பிடித்திருக்க வேண்டும். கடைசி சில ஆண்டுகளில் தன்னால் அழகாக விளையாட முடியுமென தொடர்ச்சியாக நிரூபித்து வருகிறார். எப்படியாகினாலும் இது டோனிக்கு புதியது கிடையாது. ஓய்வுபெற்றபிறகு கடைசி சீசனிலும் கடைசியாகத்தான் விளையாடினார்.  தற்போதைக்கு, சி.எஸ்.கே. அணியில் சமநிலை இல்லை. டோனி விக்கெட் கீப்பிங்கில் சிறப்பாக இருக்கிறார். அவரை முன்னதாக இறக்கியிருந்தால் வென்றிருக்கலாம் என்றார்.

_______________________________________________________________________________

மியாமி ஓபன்:  ஜோகோவிச் முன்னேற்றம்

மியாமி ஓபனில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் அரையிறுதியில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இந்தப் போட்டியில் 6-2, 6-3 என ஜோகோவிச் கிரிகோர் டிமிட்ரியை வீழ்த்தினார். இந்தப் போட்டியைப் பார்க்க ஆர்ஜென்டீன கால்பந்து வீரரும் இன்டர் மியாமி வீரருமான மெஸ்ஸி வந்திருந்தார். நடப்பு சாம்பியனான ஆர்ஜென்டீனா அணி 2026 உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது. ரசிகர்கள் பலரும் மெஸ்ஸியுடன் புகைப்படங்களை எடுத்துகொண்டனர். 

ஜொகோவிச் இறுதிப் போட்டியில் மென்சிக் உடன்மோதுகிறார். இந்தப் போட்டி இன்று (மார்ச்.30) நடைபெறவிருக்கிறது. 37 வயதாகும் ஜோகோவிச் தனது 100ஆவது பட்டத்துக்காக காத்திருக்கிறார். மியாமி ஓபனில் வென்றால் அந்தச் சாதனையும் நிகழ்ந்துவிடும். ஏற்கனவே, அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றவராக ஜோகோவிச் இருப்பது குறிப்பிடத்தக்கது.

_______________________________________________________________________________

ரெய்னாவின் சாதனை முறியடிப்பு

ஐ.பி.எல். தொடரில் சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.  முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 196 ரன்கள் குவித்தது. தொடர்ந்து 197 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த சென்னை அணி  20 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 146 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன் மூலம் 50 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு அபார வெற்றி பெற்றது.  இந்த ஆட்டத்தில் சென்னை விக்கெட் கீப்பர் டோனி 16 பந்தில் 30 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் அவர் சுரேஷ் ரெய்னாவின் சாதனை ஒன்றை முறியடித்துள்ளார். அதாவது, ஐ.பி.எல். தொடரில் சென்னை அணிக்காக அதிக ரன் அடித்தவர் என்ற சுரேஷ் ரெய்னாவின் (4687 ரன், 171 இன்னின்ஸ்) சாதனையை எம்.எஸ்.டோனி (4699 ரன், 204 இன்னிங்ஸ்) முறியடித்துள்ளார்.

_______________________________________________________________________________

நேபாள அணிக்கு புதிய பயிற்சியாளர் 

நேபாள கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த மாண்டி தேசாய் கடந்த பிப்ரவரி மாதத்துடன் பதவி விலகினார். இதனையடுத்து புதிய தலைமை பயிற்சியாளரை தேடும் பணியில் நேபாள கிரிக்கெட் வாரியம் இறங்கியது.

இந்நிலையில் நேபாள கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ஆஸ்திரேலிய முன்னாள் பேட்ஸ்மேன் ஸ்டூவர்ட் லா நியமிக்கப்பட்டுள்ளார். இவரது பதவிக்காலம் 2 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

_______________________________________________________________________________

அரியானா அணி சாம்பியன்

தேசிய மகளிர் ஆக்கி தொடர் ராஞ்சியில் நடைபெற்றது. இதில் ஒடிசா, மராட்டியம், மத்திய பிரதேசம், மணிப்பூர், அரியானா, மிசோரம், ஜார்கண்ட் மற்றும் பெங்கால் ஆகிய 8 அணிகள் கலந்து கொண்டன. இதன் லீக் சுற்று முடிவில் அதிக புள்ளிகளை பெற்ற அரியான மற்றும் ஒடிசா அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. அடுத்த இரண்டு இடங்களை பிடித்த ஜார்கண்ட் மற்றும் மத்திய பிரதேச அணிகள் 3-வது இடத்திற்கான போட்டியில் விளையாடின. மற்ற அணிகள் தொடரிலிருந்து வெளியேறின.

நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஒடிசாவை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய அரியானா அணி சாம்பியன் பட்டம் வென்றது. முன்னதாக நடைபெற்ற ஆட்டத்தில் மத்திய பிரதேசத்தை வீழ்த்தி ஜார்கண்ட் 3-வது இடம் பெற்றது.

_______________________________________________________________________________

டோனியை கலாய்த்த சேவாக்

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில்  நடந்த 8-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியது. முன்னதாக இந்த ஆட்டத்தில் சென்னை அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திரசிங் டோனி, 9-வது வரிசையில் பேட்டிங் செய்ய களமிறங்கினார். அந்த வரிசையிலும் அதிரடியாக விளையாடிய அவர் 16 பந்துகளில் 30 ரன்கள் அடித்தார். இருப்பினும் அவர் முன்கூட்டியே களமிறங்கியிருக்க வேண்டும் என்று பல முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் விமர்சித்து வருகின்றனர்.

இது குறித்து விரிவாக பேசிய சேவாக், "வழக்கமாக, அவர் 19வது அல்லது 20வது ஓவரில்தான் வருவார். ஆனால் இன்று 16-வது ஓவரிலேயே பேட்டிங் செய்ய வந்துள்ளார். அதனால் அவர் சீக்கிரமாக தானே பேட்டிங் செய்ய வந்தார், இல்லையா? " என்று கூறி கலாய்த்தார்.

_______________________________________________________________________________

கால்பந்து பயிற்சியாளர் நீக்கம்

 உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் ஆர்ஜென்டீனாவுடனான தோல்வியினால் பிரேசில் பயிற்சியாளர் நீக்கப்பட்டுள்ளார். தென்னமரிக்க கூட்டமைப்பில் 10 அணிகளில் டாப் 6 அணிகள் நேரடியாக தகுதிபெறும். பிரேசில் தற்போது இந்தப் புள்ளிப் பட்டியலில் 5ஆவது இடத்தில் இருக்கிறது. 62 வயதாகும் பயிற்சியாளர் டோரிவல் ஜூனியரின் பதவிக்காலம் முடிந்ததாக கூட்டமைப்பு கூறியுள்ளதாக ரோட்ரிக்ஸ் கூறினார். இவருடைய பதவிக்காலத்தில் பிரேசில் அணி 7 வெற்றி, 7 டிரா, 2 தோல்விகளை சந்தித்துள்ளன. கடைசி 4இல் ஒரு தோல்வியும் 25 கோல்கள் அடித்தும் 17 கோல்கள் விடுக்கொடுத்தும் இருக்கிறது பிரேசில் அணி.

கடந்தாண்டு கோபா அமெரிக்கா காலிறுதியில் பெனால்டி வாய்ப்பில் பிரேசில் வெளியேறியது. 2030 வரை ரோட்ரிக்ஸ் கூட்டமைப்பின் தலைவராக இருப்பார். ரியல் மாட்ரிட் பயிற்சியாளர் கார்லோ அன்செலட்டி, அல்-ஹிலால் பயிற்சியாளர் ஜார்ஜ் ஜீசஸை நியமிக்க பிரேசில் முடிவுசெய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இருவருக்கும் அடுத்த மாதம் கிளப் உலகக் கோப்பை போட்டிகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 days ago
View all comments

வாசகர் கருத்து