முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் தனியார் மயமாகாது: அமைச்சர் சிவசங்கர்

சனிக்கிழமை, 12 ஏப்ரல் 2025      தமிழகம்
Sivashankar 2023-05-08

 கோவை, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் ஒருபோதும் தனியார் மயமாகாது என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

கோவையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் பேருந்துகளில் மகிழ்ச்சியாக பயணம் செய்ய போக்குவரத்துக் கழக ஊழியர்கள் கடுமையாக உழைத்து வருகிறார்கள். பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் கூட அவர்கள் கொண்டாட்டத்தை மறந்து பொதுமக்களுக்காக உழைத்து வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் அரசுப் பேருந்து மூலம், பண்டிகை காலங்களில் சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்த நிலையில் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் உழைப்பால் 19 விருதுகளை போக்குவரத்துக் கழகம் பெற்று உள்ளது. இதற்கிடையே போக்குவரத்துத் துறையை தனியார் மயமாக்குவார்கள் என்று சிலர் வதந்தியும் பரப்புகிறார்கள். அவ்வாறு ஒரு நளும் நடைபெறாது.  ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக ஆயிரம் கோடி ரூபாய் போக்குவரத்துத் துறைக்கு ஒதுக்கப்படுகிறது.

இதற்கு முன்பு பழைய பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. இப்போது 1,1000 புதிய பேருந்துகள் படிப்படியாக இயக்கப்பட்டு வருகின்றன.  எனவே தனியார் மயம் என்ற தகவல் தவறானது.  இப்போது அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பெண்களும் நடத்துநர்களாக பணியில் செயல்பட்டு வருகிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து