முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

6.6 கோடி ஆண்டுகள் சிதையாமல் புதைந்திருந்த டைனோசர் முட்டை கரு கண்டுபிடிப்பு

Image Unavailable

தெற்கு சீனாவில் உள்ள கான்சூவில் கண்டுபிடிக்கப்பட்ட அந்த டைனோசர் முட்டைக்கரு குறைந்தபட்சம் 66 மில்லியன் (6.6 கோடி) ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

 

அக்கரு பல் இல்லாத தெரொபாட் சைனோசர் அல்லது ஓவிரப்டொரொசராக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அக்கருவுக்கு பேபி யிங்லியாங் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. டைனோசர்களுக்கும், நவீன கால பறவைகளுக்கும் இடையிலான தொடர்பு குறித்த புரிதலை ஆராய்ச்சியாளர்களுக்கு இந்த கண்டுபிடிப்பு வழங்குகிறது. கண்டுபிடிக்கப்பட்ட டைனோசர் முட்டைக்கரு புதை படிமத்தில், இந்தக் கரு, கை கால்களுக்கு கீழ் தலையை வைத்து சுருட்டிக்கொண்டு இருக்கிறது. பறவைகளின் முட்டையில்தான் குஞ்சு பொறிப்பதற்கு முன் இப்படி நடக்கும். ஆசியா மற்றும் வட அமெரிக்கா என்றழைக்கப்படும் பகுதிகளில், 100 மில்லியன் முதல் 66 மில்லியன் (10 கோடி முதல் 6.6 கோடி) ஆண்டுகளுக்கு முன், இறக்கைகள் கொண்ட இந்த டைனோசர்கள் இருந்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 days ago