முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விவசாயிகளுக்கு உதவும் செயற்கைகோள் உருவாக்குங்கள்- ஜனாதிபதி

செவ்வாய்க்கிழமை, 3 ஜனவரி 2012      இந்தியா
Image Unavailable

 

சென்னை, ஜன. - 4 - விவசாயிகளுக்கு உதவும் வகையில் செயற்கை கோள் தொழில்நுட்பத்தை விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானிகள் உருவாக்க வேண்டும் என்று ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் கேட்டுக் கொண்டுள்ளார். ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவன் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் நவீன வசதிகளை பார்வையிட்டு பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள செயற்கை கோள் மையத்தையும் ஜனாதிபதி திறந்து வைத்தார். பின்னர் விண்வெளி ஆராய்ச்சியில் சிறந்து விளங்கும் 20 க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளுக்கு விருதுகளையும் அவர் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது,  பொதுமக்களுக்கு பலன் அளிக்கும் வகையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி திட்டங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இவற்றை போன்றே மழையை மட்டுமே நம்பியுள்ள விவசாயம், பாசன வசதியற்ற நிலங்களில் விவசாயம் ஆகியவற்றுக்கு உதவும் வகையில் செயற்கைக் கோள் தொழில்நுட்பத்தை விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானிகள் உருவாக்க வேண்டும். இவ்வாறு உதவும் நிலையில் விவசாய பொருட்களின் உற்பத்தி அதிகரிப்பதுடன் விவசாயிகளுக்கும் அதிக வருவாய் கிடைக்கும் என்றார். நமது வாழ்வாதாரங்களான நில வளம், நீர், தாதுக்களை பாதுகாக்க தொலை உணர்வு தொழில்நுட்பம் உதவியாக இருக்கும். வானிலையின் தன்மையை முன்கூட்டியே கணிக்க உதவும் அண்மைக்கால விண்வெளி தொழில்நுட்பத்தின் பங்கு வரும் காலங்களில் மேலம் முக்கியத்துவம் பெறவுள்ளது. இத்தகைய செயல்கள் பொதுமக்களை நேரடியாக சென்றடைந்து பலனளிக்கும் என்பதில் சந்தேகமில்லை என்றார். முன்னதாக ஜனாதிபதியை இஸ்ரோ தலைவர் டாக்டர் கே. ராதாகிருஷ்ணன் வரவேற்று ஆராய்ச்சி மையத்தின் நவீன வசதிகள் குறித்து விளக்கமளித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago