எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : உடல் நலக்குறைவு மற்றும் விபத்துகளில் உயிரிழந்த 57 காவலர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவி்ட்டுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,
அரியலூர் மாவட்டம், தா.பழூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த ரவி, செங்கல்பட்டு மாவட்டம், பாலூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த சிவசங்கரன், சென்னை பெருநகர காவல், குன்றத்தூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த பாண்டிமுனி, இ-1 மயிலாப்பூர் காவல் நிலைய போக்குவரத்து பிரிவில் காவலராகப் பணிபுரிந்து வந்த அருண்காந்தி, புனித தோமையர்மலை ஆயுதப்படை பிரிவில் பெண் காவலராகப் பணிபுரிந்து வந்த சத்தியலட்சுமி, எஸ்-2 விமான நிலைய காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த ரவி, நுண்ணறிவுப் பிரிவில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த ரமேஷ் பாபு, சென்னை, தமிழ்நாடு சிறப்பு காவல்படை 2 ஆம் அணியில் பெண் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த துர்கா, சென்னை-ஆவடி, தமிழ்நாடு சிறப்பு காவல் படை பயிற்சி மையத்தின் வாத்தியக்குழு பிரிவில் காவலராகப் பணிபுரியது வந்த அருள்தாஸ், கோயம்புத்தூர் மாநகரம், வி.எச். சாலை காவல் நிலைய குற்றப்பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த அன்பழகன், தருமபுரி மாவட்டம், மகேந்திரமங்கலம் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலைக் காவலராகப் பணிபுரிந்து வந்த வெங்கடராமன், திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த அருணாச்சலம்,
பழனி நகர காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த தங்கவேலு, ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த பழனி, கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த இளையாபிள்ளை, கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த ராஜேந்திரன், நாமக்கல் மாவட்டம், வேலூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த குழந்தைவேல், பெரம்பலூர் மாவட்டம், மருவத்தூர் காவல் நிலையத்தில் பெண் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த சாந்தி, புதுக்கோட்டை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த மாரிமுத்து, சேலம் மாவட்டம், தொளசம்பட்டி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த கனிபிரசாத், சேலம் மாநகரம், சேலம் நகர அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த வனிதா, சிவகங்கை மாவட்ட ஆயுதப்படையில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த பாலகுரு, தென்காசி மாவட்டம், சொக்கம்பட்டி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த கண்ணன், புளியரை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த வேலையா, நீலகிரி மாவட்டம், ஆயுதப்படையில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த கருணாகரன்,
தேனி மாவட்டம், தேவாரம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த வெற்றிச்செல்வன்; சின்னமனூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த சோமு, திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராகப் பணிபுரிந்து வந்த கவிதா, திருவாரூர் மாவட்டம், களப்பால் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்த முருகேசன், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி காவல் நிலைய போக்குவரத்து பிரிவில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த மூர்த்தி, திருச்சிராப்பள்ளி மாவட்டம், மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்குப் பாதுகாவலராகப் பணிபுரிந்து வந்த முத்துகுமார், திருநெல்வேலி மாவட்டம், மாஞ்சோலை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த சுப்பிரமணியன், திருப்பூர் மாநகரம், திருமுருகன்பூண்டி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த விக்டர், திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த சத்தியமூர்த்தி, வேலூர் மாவட்டம், சேவூரில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் 15 ஆம் அணியில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த அண்ணாதுரை, விழுப்புரம் மாவட்டம், மாவட்ட நெடுஞ்சாலை ரோயது பிரிவில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த சிவக்குமார், விருதுநகர் மாவட்டம், இராஜபாளையத்தில் உள்ள தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 11 ஆம் அணியில் காவலராகப் பணிபுரிந்து வந்த முத்தையா ஆகியோர் உடல் நலக் குறைவால் காலமானார்கள் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.
அரியலூர் மாவட்டம், வெங்கனூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த மதியழகன், சென்னை தலைமைச் செயலக சுற்றுக்காவல் பிரிவில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த பிரதீஷ், சென்னை பெருநகர காவல், ஆயுதப்படை பிரிவில் காவலராகப் பணிபுரிந்து வந்த ராம்கி, சேலையூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த தேவராஜ், ஆயுதப்படை, முதலாம் அணியில் பெண் காவலராகப் பணிபுரிந்து வந்த செல்வி பவித்ரா, சென்னை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை 2 ஆம் அணியில் காவலராகப் பணிபுரிந்து வந்த இளங்கோவன், 3 ஆம் அணியில் காவலராகப் பணிபுரிந்து வந்த மருதுபாண்டி, 13 ஆம் அணியில் காவலராகப் பணிபுரிந்து வந்த தானேஷ், கடலூர் மாவட்டம், முத்தாண்டிக்குப்பம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த ஞானசேகரன், தருமபுரி மாவட்ட ஆயுதப்படைப் பிரிவில் காவலராகப் பணிபுரிந்து வந்த செந்தில், கிருஷ்ணகிரி மாவட்டம், தமிழ்நாடு சிறப்பு காவல் படை 7 ஆம் அணியில் காவலராகப் பணிபுரிந்து வந்த ரவிவர்மன், மதுரை மாவட்டம், தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் 6 ஆம் அணியில் பெண் காவலராகப் பணிபுரிந்து வந்த கார்த்தியாயினி, சிலைமான் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த செல்வம், சேலம் மாநகரம், சி1 அம்மாபேட்டை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த சக்திவேல்,
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்த மோசஸ் மோகன்ராஜ், தேனி மாவட்டம், தேனி காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராகப் பணிபுரிந்து வந்த முருகன், திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு சிறப்பு காவல் படை 12 ஆம் அணியில் (மணிமுத்தாறு) காவலராகப் பணிபுரிந்து வந்த அசோக்குமார், திருச்சி மாநகரம், பாலக்கரை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த தமிழ்ச்செல்வன், திருவள்ளூர் மாவட்டம், திருப்பாலைவனம் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்த அண்ணாதுரை, விருதுநகர் மாவட்டம், மம்சாபுரம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த முருகன் ஆகியோர் பல்வேறு விபத்துகளில் உயிரிழந்தனர் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.
உடல் நலக்குறைவு மற்றும் விபத்துகளில் உயிரிழந்த 57 காவலர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேற்கண்ட சம்பவங்களில் உயிரிழந்த 57 காவலர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 1 week ago |
-
கனடா நாட்டின் அடுத்த பிரதமராக இந்திய வம்சாவளி பெண் தேர்வு?
07 Jan 2025ஒட்டாவா : கனடாவின் தற்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், அடுத்த பிரதமர் யார் என கேள்வி எழுந்துள்ளது.
-
மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டி: வீரர்களுக்கான முன்பதிவு நிறைவு
07 Jan 2025மதுரை : மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ள காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு நேற்று மாலையுடன் நிறைவடைந்தது.
-
மதுரை, டங்ஸ்டன் சுரங்க விவகாரம்: நடைபயண போராட்டத்திற்கு அனுமதி மறுப்புக்கு இ.பி.எஸ். கடும் கண்டனம்
07 Jan 2025சென்னை : டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து லட்சக்கணக்கான பொதுமக்கள் சார்பில் நடைபெற்ற நடைபயணப் போராட்டத்திற்கு அனுமதி வழங்காத காவல்துறைக்கு எடப்பாடி பழனிசாம
-
எங்களுடன் இணைந்தால் சலுகை: கனடாவுக்கு ஆசை காட்டும் டிரம்ப்
07 Jan 2025வாஷிங்டன் : கனடா, அமெரிக்காவுடன் இணைந்தால், சலுகைகள் பெறலாம் என அமெரிக்கா அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.
-
சவுதி அரேபியாவின் மெக்காவில் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
07 Jan 2025ரியாத் : சவுதி அரேபியாவின் மெக்கா மற்றும் மெதினாவில் பல பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் இயல்பு வாழக்கை பாதிக்கப் பட்டுள்ளது
-
இட்டுக்கட்டி பொய் சொல்கிறார்: இ.பி.எஸ். மீது அமைச்சர் விமர்சனம்
07 Jan 2025சென்னை : போராட்டத்திற்கு காவல் துறை கட்டுப்பாடு விதித்ததை மறைத்து எடப்பாடி பழனிசாமி இட்டுக்கட்டி பொய் சொல்கிறார் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்காவில் வீசும் பனிப்புயல்: 2,400 விமானங்கள் ரத்து; 2 லட்சம் பேர் பாதிப்பு
07 Jan 2025நியூயார்க் : அமெரிக்காவில் ஏற்பட்ட பனிப் புயலால் 5 பேர் உயிரிழந்துள்ளதாக திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் 26 இடங்களில் ஐ.டி. அதிகாரிகள் சோதனை
07 Jan 2025சென்னை : சென்னை, கோவை, ஈரோட்டில் 26 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
-
சென்னையில் வரும் 11-ம் தேதி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
07 Jan 2025சென்னை : அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற 11-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.
-
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவால் காலியாகவுள்ள ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5-ல் இடைத்தேர்தல் : தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு
07 Jan 2025ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ.வாக பதவி வகித்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவை ஒட்டி, இத்தொகுதிக்கு பிப்ரவரி 5-ம் தேதி தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள
-
தி.மு.க போராட்டத்துக்கு மட்டும் அனுமதி: சென்னை ஐகோர்ட்டில் பா.ம.க முறையீடு
07 Jan 2025சென்னை : திமுக நடத்தும் போராட்டத்துக்கு மட்டும் அனுமதி அளிப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பா.ம.க தரப்பில் முறையிடப்பட்டது.
-
தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் 50 லட்சம் செட்டாப் பாக்ஸ் வழங்க உத்தரவு : ரூ.500 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்
07 Jan 2025சென்னை : அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் 50 லட்சம் செட்டாப் பாக்ஸ்கள் வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது .
-
சிகிச்சை பெற்று வரும் சிறுவனிடம் நடிகர் அல்லு அர்ஜூன் நலம் விசாரிப்பு
07 Jan 2025ஐதராபாத் : மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவனிடம் நடிகர் அல்லு அர்ஜூன் நலம் விசாரித்தார்.
-
சத்துணவு ஊழியர்களுக்கு கூடுதல் பொறுப்புப்படி ரூ. 33 ஆக உயர்வு : தமிழ்நாடு அரசு உத்தரவு
07 Jan 2025சென்னை : சத்துணவு ஊழியர்களுக்கு வழங்கப்படும் கூடுதல் பொறுப்புப் படியை ரூ. 33 ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
-
எச்.எம்.பி.வி. பாதிப்பு குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம் : மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா கோரிக்கை
07 Jan 2025புது டெல்லி : இந்தியாவில் மெடாநியூமோவைரஸ் பாதிப்பு 7 ஆக அதிகரித்திருக்கிறது. எனினும் வைரஸ் தொற்று குறித்து அச்சப்பட தேவை இல்லை என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.
-
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: ரஷ்ய அதிபர் புடின் பங்கேற்பு
07 Jan 2025மாஸ்கோ : ரஷியாவில் ஜூலியன் காலண்டர் முறையைப் பின்பற்றி கிறிஸ்துமஸ் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது.
-
பி.சி.சி.ஐ.க்கு ரவி சாஸ்திரி கேள்வி
07 Jan 2025முகமது ஷமி எப்போதுதான் இந்திய அணிக்கு திரும்புவார்? என்று பி.சி.சி.ஐ.க்கு முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
அஸ்ஸாம் நிலக்கரி சுரங்க விபத்து: 3 உடல்கள் மீட்பு; 6 பேர் கதி?
07 Jan 2025கவுகாத்தி : அஸ்ஸாமில் நிலக்கரி சுரங்க விபத்தில் 9 தொழிலாளர்கள் சிக்கியதாகக் கூறப்படும் நிலையில் 3 பேரின் உடல்கள் இதுவரை கண்டெடுக்கப்பட்டுள்ளன.
-
நடுக்கடலில் தவித்த நாகை மீனவர்கள் பத்திரமாக மீட்பு
07 Jan 2025நாகை : நடுக்கடலில் படகு என்ஜின் பழுதாகி இலங்கை எல்லைக்குச் சென்ற நாகை மற்றும் மயிலாடுதுறையைச் சேர்ந்த 9 மீனவர்கள் உரிய அனுமதியுடன் பாதுகாப்பாக மீட்கப்பட்டு நாகை த
-
போதைப்பொருள் வழக்கில் நடிகர் மன்சூர் அலிகான் மகனுக்கு உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன்
07 Jan 2025சென்னை : போதைப்பொருள் வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் நடிகர் மன்சூர் அலிகான் மகன் துக்ளக்கிற்கு சென்னை ஐக்கோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
-
சவுதி அரேபியாவில் இருந்து டெல்லியில் அயர்ன் பாக்சில் மறைத்து கொண்டு வரப்பட்ட தங்கம் பறிமுதல்
07 Jan 2025புதுடில்லி : சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இருந்து டில்லிக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு வந்த விமானத்தில் இந்தியாவைச் சேர்ந்த ஆண் பயணி கொண்டு வந்த உடைமைகளை சுங்கத்துறை
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி: 2 ஆண்டுகளில் 18 போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது
07 Jan 2025மும்பை : வருகிற 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்காக இந்திய அணி 18 போட்டிகளில் விளையாட உள்ளது.இந்திய அணி 2027 ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் ஆஸ்திரேலியாவுடன் 5 டெஸ்ட
-
படப்பிடிப்பிற்காக தாய்லாந்து பயணம்: அரசியல் கேள்விக்கு பதிலளிக்க நடிகர் ரஜினி மீண்டும் மறுப்பு
07 Jan 2025சென்னை : தான் ஏற்கனவே கூறிய படி தன்னிடம் அரசியல் கேள்விகள் கேட்க வேண்டாம் என் நடிகர் ரஜினி காந்த் தெரிவித்தார் .
-
கேரளாவில் கம்யூ. நிர்வாகி கொலை வழக்கு: ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் 9 பேருக்கு ஆயுள்
07 Jan 2025கோழிக்கோடு : கேரளாவில் 19 ஆண்டுகளுக்கு முன்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி கொல்லப்பட்ட வழக்கில் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் 9 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு
-
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீலகிரியில் முகக்கவசம் கட்டாயம் : கலெக்டர் லட்சுமி பவ்யா உத்தரவு
07 Jan 2025உதகமண்டலம் : நீலகிரி மாவட்டத்தில் அனைவரும் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தன்னேரு அறிவுறுத்தியுள்ளார்.