முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

யுவராஜ், காஷ்யப்பிற்கு அர்ஜூனா விருது - ஜனாதிபதி வழங்கினார்

வியாழக்கிழமை, 30 ஆகஸ்ட் 2012      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி, ஆக. - 30 - ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற துப்பாக்கி சுடும் வீரர் விஜயகுமார் மற்றும் மல்யுத்தத்தில் வெண்கலம் வென்ற யோகேஸ்வர் தத் ஆகியோருக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை ஜனாதிபதி வழங்கினார்.  தவிர, கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், பேட்மிண்டன் வீரர் காஷ்யப், மற்றும் வில்வித்தை வீராங்கனை தீபிகா குமா ரி  உட்பட 25 பேருக்கு அர்ஜூனா விரு து வழங்கப்பட்டது.  இந்தியாவில் விளையாட்டுத் துறையி ல் சாதனை படைக்கும் வீரர்கள் மற்று ம் வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டு தோறும் ராஜீவ் கா ந்தி கேல் ரத்னா விருது, அர்ஜூனா விருது ஆகியவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. தவிர, பயிற்சியாளர்களுக்கு துரோணா  ச்சாரியா விருதும், வாழ்நாள் சாதனை படைக்கும் வீரர்களுக்கு தயான்சந்த் விருதும் வழங்கப்பட்டு வருகின்றன.  ஜனாதிபதி மாளிகையில் நேற்று விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் 2 பேருக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதும், 25 பேருக்கு அர்ஜூனா விருது ம், 4 பேருக்கு வாழ்நாள் சாதனை விரு தான தயான் சந்த் விருதும், 8 பயிற்சி யாளர்களுக்கு துரோணாச்சாரியா விரு தும் அளித்து ஜனாதிபதி கெளரவித் தார்.  விளையாட்டுத் துறையில் சாதனை படைக்கும் வீரர்களுக்கான உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடும் பிரிவில் வெள்ளி ப் பதக்கம் வென்ற விஜயகுமார் மற்றும் மல்யுத்தத்தில் வெண்கலம் வென்ற யோகேஸ்வர் தத் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. வீரர்களை ஊக்குவித்து சர்வதேச அளவி ல் சிறந்த வீரர்களாக உருவாக்கிய பயிற் சியாளர்களுக்கு அளிக்கப்படும் துரோ ணாச்சாரியா விருது ஜஸ்விந்தர்சிங் , பவானி சிங் உட்பட 8 பேருக்கு இந்த விருதை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கினார்.  கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், ஒலிம்பி க்கில் காலிறுதிக்கு முன்னேறிய பேட் மிண்டன் வீரர் பருவபள்ளி காஷ்யப் ஆகியோருக்கு அர்ஜூனா விருதை ஜனாதிபதி வழங்கி கெளரவித்தார்.  தவிர, விகாஸ் கிருஷன் (குத்துச் சண்டை), சர்தார் சிங் (ஹாக்கி), யஸ்பால் சோலங்கி (ஜூடோ), அனுப் குமார் (கபடி), சுனில் சாகர் (போலோ), அனு ராசிங் (துப்பாக்கி சுடுதல்), ஓம்கார் சிங் (துப்பாக்கி சுடுதல்), ஜாய் தீப் சர் மா, தீபிகா பல்லிகல் (ஸ்குவாஷ்), சந் தீப் தேஜேஸ்வர் (நீச்சல்), சோனியா சானு (பளுதூக்குதல்), நர்சிங் யாதவ் (மல்யுத்தம்), ராஜேந்திர குமார் (மல்யு த்தம்), கீதா கோகட் (மல்யுத்தம்), அஸ் வினி பொன்னப்பா, கவிதா ராம்தா ஸ், பொம்பலா தேவி, தீபிகா குமாரி (வில்வித்தை), கவிதா சிங், மற்றும் ஆதித்யா மேத்தா ஆகியோருக்கு அர்  ஜூனா விருது அளிக்கப்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago