முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அக். 17 முதல் நவ. 14 வரை டி - 20 கிரிக்கெட் உலக கோப்பை அமீரகம், ஓமனில் நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 29 ஜூன் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

லண்டன்: 2021 டி-20 கிரிக்கெட் உலக கோப்பை தொடர் அக். 17 முதல் நவ. 14 வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் நாட்டில் நடைபெற உள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. 

கொரோனா பரவல்...

முன்னதாக இந்த தொடர் இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருந்தாலும் இந்த தொடரை நடத்தும் ஹோஸ்ட் அணியாக இந்தியா களம் இறங்குகிறது. 

அபுதாபி - ஷார்ஜா...

அமீரகத்தில் உள்ள துபாய் சர்வதேச மைதானம், அபுதாபி மற்றும் ஷார்ஜா மைதானத்தில் போட்டி நடைபெற உள்ளது. ஓமனில் ஓமன் கிரிக்கெட் அகாடமி மைதானத்தில் போட்டி நடைபெற உள்ளது. 

8 அணிகளுக்கு... 

இந்த தொடரின் முதற்கட்டமாக தகுதி சுற்று 8 அணிகளுக்கு நடைபெற உள்ளது. வங்கதேசம், இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, நமிபியா,  ஓமன் மற்றும் பப்புவா நியூ கினி ஆகிய அணிகள் இந்த தகுதி சுற்றில் பங்கேற்கின்றன. அதில் முதல் நான்கு இடங்களை பிடிக்கின்ற அணிகள் தொடரில் பங்கேற்க தகுதி பெற்றுள்ள 8 அணிகளுடன் சேர்ந்து சூப்பர் 12 சுற்றில் விளையாடும். 

இறுதிப்போட்டி...

அக்டோபர் 17-ம் தேதி தொடங்கும் இந்த தொடரில் இறுதிப் போட்டி நவம்பர் 14-ம் தேதி நடைபெறுகிறது. பயோ செக்யூர் முறையில் பல அணிகள் பங்கேற்று விளையாடும் தொடரை அமீரகம் நடத்தியுள்ள காரணத்தினால் இந்த முடிவுக்கு வந்துள்ளதாம் ஐ.சி.சி. இந்தியாவில் இந்த தொடரை நடத்தாமல் போன காரணத்திற்காக தனது ஆதங்கத்தையும் ஐ.சி.சி வெளிப்படுத்தி உள்ளது. 

பேச்சுவார்த்தை...

கிரிக்கெட் ரசிகர்களுக்கு நல்லதொரு கிரிக்கெட் தொடரை காட்சிப்படுத்த இந்திய கிரிக்கெட் வாரியம், எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியம் மற்றும் ஓமன் கிரிக்கெட் உடன் ஐ.சி.சி பேசி வருகிறதாம். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து