முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பை சிவாஜி பூங்காவில் பால்தாக்கரே உடல் தகனம்

திங்கட்கிழமை, 19 நவம்பர் 2012      இந்தியா
Image Unavailable

மும்பை,நவ.- 19 - மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் பால்தாக்கரேயின் உடல் தகனம் செய்யப்பட்டது. அவரது இறுதிச்சடங்கில் அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், வர்த்தகர்கள்,திரையுலகினர் உள்பட லட்சகணக்கானோர் இறுதி அஞ்சலி செலுத்தினர். மகாராஷ்டிரா மாநிலத்தில் கார்ட்டூனிஸ்ட்டாக இருந்து அரசியலில் புகுந்து நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவராக உயர்ந்து உயிர்நீத்த சிவசேனா கட்சி தலைவர் பால்தாக்கரே ஒருவார காலமாக
உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் தன்னுடைய மடோஸ்ரீ வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு 86 வயதாகிவிட்டால் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் பிற்பகல் சரியாக3.30 மணிக்கு மரணமடைந்தார். அவரது மரண செய்தி கேட்டதும் மும்பை நகர் மட்டுமல்லாது மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் இருந்து அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள்,வர்த்தகர்கள், திரையுலகினர், பொதுமக்கள், சிவசேனா கட்சி தொண்டர்கள் உள்பட ஏராளமானோர் சாரை சாரையா வந்து அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி செலுத்துவோர்களின் எண்ணிக்கை நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்துக்கொண்டே இருந்தது. இருந்தபோதிலும் பால் தாக்கரே உடலை விரைவில் அடக்கம் செய்ய அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர். அதனால் நேற்றுக்காலை 7.30 மணிக்கு பால்தாக்கரேயின் உடல் மாடோஸ்ரீயில் இருந்து வெளியே கொண்டுவரப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு அஞ்சலி செலுத்திக்கொண்டே இருந்ததால் உடலை கொண்ட தாமதமாகியது. நேற்றுக்காலை சரியாக 9.30 மணி அளவில்தான் உடலை வீட்டில் இருந்து வெளியே கொண்டுவர முடிந்தது. சிவசேனை கட்சியின் தலைமை அலுவலகமான சேனா பவனுக்கு பால் தாக்கரே உடல் நேற்றுக்காலை 11.30 மணிக்கு கொண்டுவரப்பட்டது. அங்கு சுமார் அரைமணிநேரம் அவரது உடல் வைக்கப்பட்டிருந்தது. சேனா பவனில் மூத்த தலைவர்கள் கண்ணீர்மல்க குழுமியிருந்தார்கள். நேற்றுப்பகல் 12.30 மணி அளவில் சேனா பவனில் இருந்து வெளியே கொண்டுவரப்பட்டு சிவாஜி பூங்காவுக்கு எடுத்துச்செல்லப்பட்டது. வழிநெடுகிலும் சிவசேனா தொண்டர்கள், பொதுமக்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். வீடுகள், தெருவோரங்கள், வீட்டு மாடிகள் ஆகியவைகளில் இருந்தும் மக்கள் தாக்கரே உடலை பார்த்து கண்ணீர் வடித்தனர். லட்சக்கணக்கான மக்கள் கூட்டத்தினர்களிடையே பால்தாக்கரே உடல் சிவாஜி பூங்காவிற்கு எடுத்துச்செல்லப்பட்டது. அங்கு சுமார் 5 அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த பிரத்யேக மேடைக்கு செல்ல முக்கிய பிரமுகர்கள் அனுமதிக்கப்பட்டனர். தொண்டர்கள், பொதுமக்களும் சிறிது தூரத்தில் நிறுத்தப்பட்டிருந்தனர். பால்தாக்ரேயின் உடலுக்கு பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்த வசதியாக 3 வரிசையாக பிரித்து அனுப்பப்பட்டனர். சிவாஜி பூங்கா மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். பால்தாக்கரேயின் தகனத்திற்காக ஏற்பாடுகளை சிவசேனா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஸ்ரீதர் ஜாதவ் கவனித்தார். அவரது உடல் நேற்று மாலை சுமார் 6 மணி அளவில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு மகன்கள் சிதை மூட்டினர். இறுதிச்சடங்கில் சரத்பவார் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், நரேந்திர மோடி, பிரித்வி ராஜ் சவாண் உள்ளிட் முதல்வர்கள், சுஷ்மா சுவராஜ் மற்றும் பா.ஜ.க. மூத்த தலைவர்கள், மாநில அமைச்சர்கள்,எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். சிவாஜி பூங்காவில்தான் கடந்த 40 ஆண்டுகளாக தொண்டர்கள் மத்தியில் பால்தாக்கரே உரையாற்றுவது வழக்கம். அதை நினைவூட்டும் வகையில் அந்த பூங்காவிலேயே அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. மகாராஷ்டிரா மக்களின் முன்னேற்றத்திற்காக பால்தாக்கரே பாடுபட்டு வந்தாலும் பிழைப்பு தேடி வந்த வெளிமாநில மக்களிடத்திலும் அன்பு காட்டி வந்தார். பாரதிய ஜனதா கட்சியுடன் அவர் கூட்டணி வைத்திருந்தாலும் சில முக்கிய முடிவுகளை எடுப்பதில் தனது மனசாட்சிப்படியே நடந்து கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago