முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

30 நிமிடத்தில் பல் வலியை குறைக்க எளிய டிப்ஸ்

  1. நமது உடலில் கால்சியம் சத்து குறைந்தால் பல் வலி,பல் சொத்தை,ஈறு வீக்கம்,பல் கூச்சம் மற்றும் எலும்பு சம்மந்தமான பல்வேறு  நோய்கள் வர வாய்ப்புள்ளது.
  2. சிலருக்கு பல்லில் மஞ்சள் கரை இருக்கும் அதற்கு கரிசிலாங்கண்ணி இலை சிலவற்றையும் சிறிதளவு உப்பையும் சேர்த்து நன்கு மென்று அந்த சாறு பல்லில் படும்படி சாப்பிட கரை மறையும்.
  3. பல்லுக்கு நாம் முக்கியத்துவம் தரவேண்டியது அவசியம் ஆகும்.
  4. நமது பற்களின் அடிப்படையாக  உள்ள ஈறுகளை பலப்படுத்தினால் பல் பலமடையும்.
  5. ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை பற்களை சுத்தம் செய்ய வேண்டும்.
  6. பற்களை மேல்  இருந்து கீழாகவும்,பின் வலப்புறம் மற்றும் இடப்புறம் சுத்தம் செய்ய வேண்டும்.
  7. பற்களை சுத்தம் செய்யும் போது ஈறுகளை அழுத்தி மசாஜ் செய்யும் போது கெட்ட நீர் வெளி வருவதுடன்  பல வியாதிகள் வருவது தடுக்கப்படுகிறது.
  8. பல்லில் இருந்து மூளைக்கு செல்லும் நரம்பு பாதிக்க படுவதால் பல் கூச்சம் ஏற்படுகிறது.
  9. சூடான நீர் மற்றும் குளிர்ந்த நீர் அருந்தும்போது இதை உணர முடியும்.
  10. பல்லில்  வேர் சிகிச்சையை  செய்து இந்த வியாதியை சரிசெய்ய முடியும்.
  11. பல் கூச்சம் மற்றும்  ஈறுகளையும் ,வேரையும் பாதுகாக்க கல் உப்பு போட்டு வாய் கொப்பளித்தல் முறை பயன் தரும்,
  12. பல் வியாதி குறைந்தாலும் தொடர்ந்து கல் உப்பு போட்டு வாய் கொப்பளித்தல் பல்,பல் ஈறு வேர் அனைத்திலும் உள்ள  கிருமிகள் ஒழிந்து  பற்கள் உறுதியாகும்.
  13. அதிக நேரம் எதுவும் சாப்பிடாவிட்டால் வாய் மற்றும் பல்லில் கிருமிகள் வர வாய்ப்புள்ளது இவற்றை உப்பு நீர் அழிக்கிறது.
  14. சித்த வைத்திய முறையில் இதற்கு எளிய மருந்து உள்ளது.
  15. ஒரு கிராம்பு,ஒரு மிளகு மற்றும் சிறிதளவு உப்பு இவற்றை பொடி செய்து பல் வலி உள்ள இடத்தில் சிறிது நேரம் வைத்து பின்னர் வாய் கொப்பளித்தால் 20 நிமிடம் முதல் 30 நிமிடத்தில்  நோய் குணமாகும்.
  16. இது ஒருதற்காலிக நிவாரணம் என்றாலும்  நல்ல பலன் தரும்,எனினும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மேல் வலி தொடர்ந்தால் நல்ல மருத்துவரை அணுகுவது நல்லது.
  17. பற்கள் உள்ளே உள்ள  வேர்கள்,நரம்புகள்  மூலமாக கால் மற்றும் முளை வரை தொடர்பு இருப்பதால் அதிக வலி இருப்பின் மருத்துவரை அணுகினால் மட்டுமே நோயின் தன்மை அறிந்து தீர்க்க முடியும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 days ago