எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : சுய ஆளுமைத் திறனை மேம்படுத்துதல், பெற்றோர்களது பேச்சை மதித்து நடத்தல் போன்ற பண்புகளை சிறார்கள் வளர்த்து கொள்ள வேண்டும் என்றும், குற்றம் அதிகரிக்க குடும்பத்தின் பொருளாதார நிலையே காரணம் என்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்தும் சிற்பி திட்ட தொடக்க விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது,
காவல்துறையை மக்களின் நண்பன் என்று சொல்கிறோம். காவல்துறையும், மக்களும் ஒன்றிணைந்து செயல்பட்டால் குற்றங்கள் குறையும் என்பதைவிட, குற்றமே நிகழாமலும் தடுக்கப்படும் என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த வகையில் மக்களையும் காவல்துறையையும் ஒன்றிணைக்கும் ஒரு முக்கியமான திட்டமாக சிற்பி என்ற புதிய முன்னெடுப்பை தமிழக காவல்துறை உருவாக்கியிருக்கிறது.
சென்னை மாநகரில் உள்ள 100 அரசுப் பள்ளிகளில், பள்ளிக்கு தலா 50 மாணவர்கள் வீதம் பங்கேற்கக் கூடிய வகையில் இந்தத் திட்டம் நிறைவேற்றப்படுகிறது. சிறுவர்களை இளமைக் காலம் முதலே பொது ஒழுக்கம் உள்ளவர்களாகவும், சமூகப் பொறுப்புள்ளவர்களாகவும் ஆக்க இந்தத் திட்டம் பயன்படும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. சிறார் குற்றங்களைக் கட்டுப்படுத்துவதில் தமிழக காவல்துறை சிறப்புக் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறது.
சிறார் குற்றச் செயல்களில் ஈடுபட, குடும்ப உறுப்பினர்களின் கவனக்குறைவு, போதிய குடும்ப வருமானம் இல்லாமை, ஆதரவில்லாமல் சிறார்கள் வளர்வது, வேலைவாய்ப்பின்மை போன்றவை பெரும்பாலும் இதற்குக் காரணமாக அமைந்திருக்கிறது. இவற்றைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுப்பதன் மூலமாக, சிறார்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்கிறதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கமாக அமைந்திருக்கிறது.
வளர்ச்சி என்பது ஒரு பக்கத்திலே இருந்தாலும் போதைப் பொருள் ஒழிப்பு, குடிப்பழக்கத்திற்கு எதிரான நடவடிக்கைகள், சட்டம் சார்ந்த விழிப்புணர்வு பெறச் செய்தல், அரசு சார்ந்த மற்றும் அரசு சாரா அமைப்புகளுடன் தொடர்பினை ஏற்படுத்துதல், சுய ஆளுமைத் திறனை மேம்படுத்துதல், பெற்றோர்களது பேச்சை மதித்து நடத்தல், பொதுமக்களோடு தொடர்பு, இளம் வயதிலிருந்து போக்குவரத்து விதிகளைக் கடைபிடிக்க செய்தல், மாநிலத்தின் செழுமை மற்றும் வளர்ச்சியை கண்டு பெருமை கொள்ளச் செய்தல் ஆகிய பண்புகளை சிறார்களிடையே உருவாக்கியாக வேண்டும்.
இப்படி உருவாக்கப்படும் மாணவர்கள் எதிர்காலத்தில் நிச்சயமாக தலைசிறந்து விளங்குவார்கள். அதாவது சிற்பியைப் போல நாம் மாணவர்களைச் சிரத்தை எடுத்து செதுக்கியாக வேண்டும்.
இந்த செயல் திட்டத்திற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள 100 பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலக்கூடிய 2,764 மாணவர்களும், 2,236 மாணவிகளும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு பள்ளியிலும் இரண்டு ஒருங்கிணைப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தப் பள்ளிகளில் ஒவ்வொரு புதன்கிழமையும் மாணவ, மாணவியர்கள் அப்பள்ளியில் உள்ள இரு ஒருங்கிணைப்பு அதிகாரிகளின் முன்னிலையில் கூடுவார்கள். மாணவ, மாணவியர்களுக்கான வகுப்புகளைக் காவல்துறை அதிகாரிகளும் துறைசார் நிபுணத்துவம் பெற்றவர்களும் நடத்துவார்கள். இதுதொடர்பாக மாணவ, மாணவியர்களுக்குப் புத்தகம் ஓன்று வழங்கப்படும்.
இந்த வகுப்புகள் நடைபெறும் தருணங்களில் மாணவ, மாணவியர்களுக்கு ஊட்டச் சத்து மிக்க உணவுகள் வழங்கப்படும். மேலும், இம்மாணவ, மாணவியர்கள் நிர்ணயிக்கப்பட்ட 8 இடங்களுக்குச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பயிற்சிக் காலத்தில் மனித உரிமை மீறல்கள் இருக்கக் கூடாது. அவர்களது தன்மானத்துக்கு இழுக்கு ஏற்படும் வகையில் யாரும் நடக்கக் கூடாது. எந்தவிதமான புகாரும் வராமல் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நல்லொழுக்கம் கொண்டவர்களாக அவர்களை வளர்ப்பதன் மூலமாக நல்ல தலைமுறைகளை உருவாக்குவோம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 1 week ago |
-
பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் துவக்கி வைத்தார்
09 Jan 2025சென்னை, பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் துவக்கி வைத்தார்.
-
நிதி நெருக்கடியால் பொங்கலுக்கு ரூ.ஆயிரம் வழங்க முடியவில்லை: சட்டசபையில் அமைச்சர் விளக்கம்
09 Jan 2025சென்னை, புயல், வெள்ள நிவாரணப் பணிகளை மாநில அரசு நிதி மூலம் மேற்கொள்ளப்பட்டதால் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக, பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.1,000 வழங்க முடியவில்லை என
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 09-01-2025.
09 Jan 2025 -
பொங்கல் பரிசு தொகுப்பை வழங்க இன்று அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும்: உணவுப் பொருள் வழங்கல் துறை அறிவிப்பு
09 Jan 2025சென்னை, பொங்கல் பரிசு தொகுப்பை பெறுவதற்காக இன்று அனைத்து ரேஷன் கடைகளும் வழக்கம்போல் செயல்படும் என உணவுப் பொருள் வழங்கல் துறை அறிவித்துள்ளது.
-
சட்டசபையில் யு.ஜி.சி.யின் புதிய விதிகளுக்கு எதிராக முதல்வரின் தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்: அ.தி.மு.க. ஆதரவோடு நிறைவேறியதாக சபாநாயகர் அறிவிப்பு
09 Jan 2025சென்னை, யு.ஜி.சி.யின் புதிய விதிகளுக்கு எதிராக சட்டசபையில் முதல்வர் கொண்டு வந்த தனித்தீர்மானம் அ.தி.மு.க.
-
திருப்பதி உயிரிழப்பு சம்பவம்: எடப்பாடி பழனிசாமி இரங்கல்
09 Jan 2025சென்னை, திருப்பதி கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோரின் குடும்பத்தினருக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
டெல்லி சட்டப்பேரவை தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்: வரும் 18-ம் தேதி மனுக்கள் மீது பரிசீலனை
09 Jan 2025புதுடெல்லி, 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு பிப்ரவரி - 5ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்றும், தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 8-ம் தேதி எண்ணப்படு
-
குற்றங்களை கட்டுப்படுத்த நாம் தொழில்நுட்பங்களை வலுப்படுத்த வேண்டும்: தகவல் தொழில்நுட்ப மாநாட்டில் முதல்வர் பேச்சு
09 Jan 2025சென்னை, தொழில்துறை வளர்ச்சியில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்கிறது என்று தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், குற்றங்களை கட்டுப்படுத்த நாம் தொழில்நுட்பங்களை வலுப்படுத்
-
திருப்பதியில் 6 பேர் உயிரிழந்த சம்பவம்: விசாரணைக்கு பிரதமர் மோடி உத்தரவிட ரோஜா கோரிக்கை
09 Jan 2025திருப்பதி: திருப்பதியில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த பிரதமர் மோடி உத்தரவிட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ரோஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
-
டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மிக்கு ஆதரவு தெரிவித்த உத்தவ் தாக்கரே
09 Jan 2025புது டெல்லி, டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸை தொடர்ந்து சிவசேனை (உத்தவ் அணி) கட்சியும் ஆம் ஆத்மிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
-
மீண்டும் ஒரு சம்பவம்: குமரிக்கு கழிவுகளை ஏற்றி வந்த கேரளாவை சேர்ந்த 9 பேர் கைது
09 Jan 2025கன்னியாகுமரி, மீண்டும் ஒரு சம்பவமாக குமரிக்கு கழிவுகளை ஏற்றி வந்த கேரளாவை சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டனர். வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
-
தேர்தல் நேரத்தில் பரிசுத்தொகை: அமைச்சர் பேச்சால் சுவாரஸ்யம்
09 Jan 2025சென்னை, பொங்கல் பரிசுத் தொகை குறித்து பேரவையில் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தேர்தல் வந்தால் பொங்கல் பரிசு தருவது பற்றி பார்க்கலாம் என்று நகைச்சுவையாகப் பதி
-
திருப்பதி கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
09 Jan 2025சென்னை, திருப்பதி கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோரின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ரூ.4.89 லட்சம் கோடி வரை பொருளாதார இழப்பு: கலிபோர்னியா காட்டுத்தீயை பேரிடராக அறிவித்த பைடன்
09 Jan 2025லாஸ் ஏஞ்சல்ஸ், லாஸ் ஏஞ்சல்ஸின் பல பகுதிகளிலும் காட்டுத்தீ விரைவாக பரவி வருகிறது.
-
தொலைபேசி மூலம் நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் : மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை
09 Jan 2025திருநெல்வேலி, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு இருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைபேசியால் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
திருப்பதியில் கூட்டநெரிசலில் உயிரிழந்த தமிழ்நாட்டை சேர்ந்தவரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
09 Jan 2025சென்னை, திருப்பதி கோவிலில் கூட்டநெரிசலில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்: வேட்பாளருடன் 5 பேருக்கு மட்டுமே அனுமதி
09 Jan 2025ஈரோடு, காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ.
-
நம்பமுடியாத வேகத்தில் இந்தியாவின் வளர்ச்சி: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
09 Jan 2025புவனேஸ்வர், 21-ம் நூற்றாண்டில் இந்தியா நம்பமுடியாத வேகத்தில் முன்னேறி வருவதாகவும், உலகமே இன்று இந்தியா சொல்வதைக் கேட்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
சட்டசபை தி.மு.க.வின் பொதுக்கூட்ட மேடையல்ல: இ.பி.எஸ். கண்டனம்
09 Jan 2025சென்னை, தமிழக சட்டசபை மக்களின் மேடை; தி.மு.க.வின் பொதுக்கூட்ட மேடையல்ல என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
டெல்லி சட்டசபை தேர்தலில் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டி: அரவிந்த் கெஜ்ரிவால் திட்டவட்டம்
09 Jan 2025புதுடில்லி, புதுடில்லியில் தோல்வியடைவோம் என்ற அச்சத்தில் 2-வது தொகுதியில் போட்டியிடப்போவதாக பா.ஜ.க.
-
நாகை மீனவர்கள் 10 பேர் கைது
09 Jan 2025நாகப்பட்டினம்: நாகையில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 10 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.;
-
இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு எதிரொலி: பொங்கல் தொகுப்பை வாங்க முடியாமல் ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் ஏமாற்றம்
09 Jan 2025ஈரோடு: இடைத்தேர்தல் தேதி அறிவிப்பால் தேர்தல் நடத்தை விதிகள் அமல் ஆனதை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதியில் பொங்கல் தொகுப்பை வாங்க முடியாமல் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
-
பெரியார் குறித்த சர்ச்சை கருத்து: சீமானுக்கு எதிராக தி.மு.க புகார்
09 Jan 2025சென்னை: பெரியார் குறித்த சர்ச்சை கருத்துகளை கூறியதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக சென்னை காவல் ஆணையரகத்தில் தி.வி.க. மற்றும் தி.மு.க.
-
யு.ஜி.சி புதிய விதிகளுக்கு எதிர்ப்பு: தி.மு.க மாணவரணி இன்று ஆர்ப்பாட்டம்
09 Jan 2025சென்னை: யு.ஜி.சி.யின் புதிய விதிகளுக்கு எதிராக மாணவரணி சார்பில் இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தி.மு.க தலைமை அறிவித்துள்ளது.
-
டங்ஸ்டன் திட்டத்தை கைவிடும் வரை ரேஷன் பொருட்களை வாங்காமல் புறக்கணிப்பதாக மக்கள் அறிவிப்பு
09 Jan 2025மதுரை: டங்ஸ்டன் திட்டத்தை கைவிடும் வரை ரேஷன் பொருட்களை வாங்காமல் புறக்கணிப்பதாக கிராமமக்கள் அறிவித்துள்ளனர்.