முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காசியில் சாலையோர உணவகத்தில் சிற்றுண்டி சாப்பிட்ட நீடா அம்பானி

புதன்கிழமை, 26 ஜூன் 2024      இந்தியா
Neeta-Ambani 2024-06-26

Source: provided

வாரணாசி : காசி விஸ்வநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்த, ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானியின் மனைவி நீடா, பிறகு அங்குள்ள சாலையோர உணவகத்தில் சாப்பிட்ட வீடியோ  வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி - நீடா அம்பானியின் மகன் ஆனந்த் திருமணம் அடுத்த மாதம் 12-ம் தேதி மும்பையில் உள்ள ஜியோ அரங்கில் நடைபெறுகிறது. ராதிகா மெர்ச்சண்டை அவர் மணம் முடிக்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

மகன் திருமணத்தை முன்னிட்டு நீடா அம்பானி காசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். இது குறித்து பேசிய அவர், மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். இந்து மரபுப்படி கடவுளின் ஆசிர்வாதத்தை நாடுகிறோம். திருமணத்திற்கு கடவுளை அழைத்திருப்பதாக தெரிவித்தார்.

பிறகு அவர், அங்குள்ள சாலையில் இருந்த சிற்றுண்டி கடைக்கு சென்று மக்களுடன் அமர்ந்து சாப்பிட்டார். உருளைக் கிழங்கு மசாலாவில் செய்யப்பட்ட சிற்றுண்டியை ருசித்த அவர், அதன் சுவை மற்றும் தயாரிப்பு குறித்து கடை ஊழியர்களுடன் பேசினார். இது குறித்த வீடியோ  வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 days ago
View all comments

வாசகர் கருத்து