முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி: மக்களவை அதிகாரப்பூர்வ அறிவிப்பு

புதன்கிழமை, 26 ஜூன் 2024      இந்தியா
Modi-Rahul 2024-06-26

Source: provided

புதுடெல்லி : எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தியை அங்கீகரித்து மக்களவை தலைவர் ஓம் பிர்லா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இன்டியா கூட்டணிக் கட்சிகளின் மக்களவைக்குழு தலைவர்களின் கூட்டம் செவ்வாய்க்கிழமை இரவு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இல்லத்தில் நடைபெற்றது. இதில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி ஒருமனதாக அறிவிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், நேற்று காலை கூடிய மக்களவைக் கூட்டத்தொடரிலும், எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி செயல்படத் தொடங்கினார்.

மக்களவைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் வெற்றி பெற்ற ஓம் பிர்லாவை மரபுப்படி, பிரதமர் நரேந்திர மோடியுடன், எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் அழைத்துச் சென்று இருக்கையில் அமர வைத்தார். தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவராக மக்களவையில் அவைத் தலைவரை வாழ்த்தி தனது முதல் உரையையும் நிகழ்த்தினார்.

இந்த நிலையில், மக்களவை செயலகம் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு அவைத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருக்கான அனைத்து சலுகைகளும் கிடைக்கும் என்றும், ஜூன் 9, 2024 முதல் இந்த உத்தரவு அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 days ago
View all comments

வாசகர் கருத்து