முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 29 பேர் போட்டி: நா.த.க. உள்ளிட்ட வேட்பாளருக்கு சின்னங்கள் ஒதுக்கீடு

புதன்கிழமை, 26 ஜூன் 2024      தமிழகம்
Vikravandi 2024-06-26

விக்கிரவாண்டி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வேட்புமனுக்களைத் திரும்ப பெறுவதற்கான கடைசி நாளான நேற்று (ஜூன் 26) யாரும் மனுக்களைத் திரும்ப பெறவில்லை. இதனால், இடைத்தேர்தலில் 29 பேர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையம்...

விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதிக்கு ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. வேட்புமனு தாக்கல் ஜூன் 14-ம் தேதி தொடங்கி 21-ம் தேதி முடிவடைந்தது. வாக்குப்பதிவு ஜூலை 10-ம் தேதி, வாக்கு எண்ணிக்கை 13-ம் தேதி நடைபெற உள்ளது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக மற்றும் அதன் தோழமைக் கட்சியான தேமுதிக புறக்கணித்துவிட்டது.

வாபஸ் இல்லை...

இந்நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உட்பட 64 பேர் போட்டியிட வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். இதில் 35 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 29 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தன. வேட்புமனுக்களைத் திரும்ப பெறுவதற்கான கடைசி நாளான நேற்று (ஜூன் 26) 29 பேர்களில் யாரும் தங்களது வேட்புமனுக்களை வாபஸ் பெற விருப்பம் தெரிவிக்கவில்லை.

அதிகாரப்பூர்வ.... 

மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான நேரம் பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்த நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 29 பேர் போட்டியிடுவார்கள் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து வேட்பாளர்களுக்கான சின்னம் ஒதுக்கீடு செய்யும் பணி தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது. 

மைக் சின்னம்...

விக்கிரவாண்டி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்ற சின்னம் ஒதுக்கும் பணியில், இடைத்தேர்தலில் போட்டியிடும் 29 வேட்பாளர்களும் கலந்து கொண்டனர். திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவுக்கு உதயசூரியன், பாமக வேட்பாளர் சி.அன்புமணிக்கு மாம்பழம், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அபிநயாவுக்கு மைக் சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது.சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கும் பணி நடந்தது. இதில், 4 பேர் பானை சின்னத்தைக் கேட்டிருப்பதால், அவர்களுக்கு குலுக்கல் முறையில் சின்னம் ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 days ago
View all comments

வாசகர் கருத்து