முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செயற்கைக்கோள் மூலம் சுங்கக்கட்டணம் வசூல்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்

புதன்கிழமை, 26 ஜூன் 2024      இந்தியா
Nitin-Gadkari

புதுடெல்லி, செயற்கைக் கோள் மூலம் சுங்கக் கட்டணம் வசூல் செய்யும் திட்டம் கொண்டு வரப்பட்டால், தடையற்ற பயணம், சாலைகளில் போக்குவரத்து நெரிசல் போன்றவை குறையும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

புது டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய நிதின் கட்கரி, இந்தியாவில் எலக்ட்ரானிக் சுங்கக் கட்டண தொழில்நுட்பம் குறித்துப் பேசினார். அதாவது, செயற்கைக் கோள் தொழில்நுட்பம் மூலம் சுங்கக் கட்டணம் வசூல் செய்யும் முறை கொண்டு வரப்படுவது, மக்களின் வாழ்க்கையை எளிதாக்கவும், மத்திய அரசின் நடவடிக்கைகள் மேலும் வெளிப்படையாகவும் மிக விரைவான சேவையை அளிக்கவும் வழிவகை செய்யும் என்று தெரிவித்துள்ளார். தேசிய நெடுஞ்சாலைகளில், தடையற்ற போக்குவரத்து மற்றும் நெரிசலற்ற பயணங்களை தேசிய நெடுஞ்சாலைத் துறை எற்படுத்தும் என்றும் கூறினார்.

மத்திய அமைச்சர் பங்கேற்ற கருத்தரங்கில் பல்வேறு விஷயங்களும் விவாதிக்கப்பட்டது. தேசிய நெடுஞ்சாலைக் கட்டண விதிகள், சுங்கக் கட்டண வசூல் மென்பொருள், குறைகளை நிவர்த்தி செய்யும் அமைப்பு, மிக அடிப்படையான சாலை கட்டமைப்பு உருவாக்கப்பட்டு, பல வழித்தட சாலைகளை உருவாக்குதல் போன்றவையும் செயற்கைக் கோள் சுங்கக் கட்டண வசூல் முறைக்கு அவசியம் என்று ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின்படி, சாலைகளில் எலக்ட்ரானிக் சுங்கக் கட்டண வசூலிக்கும் அமைப்புகள் பொருத்தப்பட்டு, ஒரு வாகனம் தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் தொலைவைக் கணக்கில் கொண்டு கட்டணத்தை வசூலிக்கும் வகையில் செயல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 days ago
View all comments

வாசகர் கருத்து