முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் 88 ஆண்டுகள் இல்லாத மழைப்பொழிவு : மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

வெள்ளிக்கிழமை, 28 ஜூன் 2024      இந்தியா
Delhi 2024-06-28

Source: provided

புதுடெல்லி : தலைநகர் டெல்லியில் 88 ஆண்டுகளாக காணாத மழைப்பொழிவு காரணமாக டெல்லியின் பல பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது மற்ரும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

வானிலை ஆய்வுமையம் தெரிவிக்கையில்., 1936-க்கு பிறகு அதிகபட்சமாக 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவை டெல்லி சந்தித்து வருவதாக குறிப்பிட்டுள்ளது. ஜூன் மாதத்தில் வழக்கமாக 80.6 மிமீ மழையை டெல்லி பெறும். தற்போதைய வெள்ளம் தேக்கம் நகரின் கட்டுமானத்திலும் குறிப்பாக கழிவுநீர் வடிகால் அமைப்பிலும் உள்ள போதாமையை காட்டுகிறது.

டெல்லி மேயர் ஷெல்லி ஓபராய் ஜூன் 18-ம் தேதி டெல்லி பருவமழையை சந்திக்க தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார். வெள்ளநீர் வடிகால் தூய்மையாகவும் தயாராகவும் உள்ளதாகவும் இடர்பாடுகளின்றி பருவமழையை எதிர்கொள்ளவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இரண்டு நாள்களாக பெய்த மழையால் டெல்லியின் முக்கிய சந்திப்புகள் பலவற்றிலும் இரண்டு முதல் மூன்று அடிக்கு நீர் தேங்கியுள்ளது.

நொய்டாவிலும் இதே நிலை நிலவுவதாக கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த மழையால் வழக்கத்தை விட 3.2 டிகிரி குறைந்து 24.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவுகிறது. இரண்டு மாதங்களாக நிலவிவந்த கடுமையான வெப்பத்தை தணிப்பதாக மழை இருப்பினும் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது.

டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக டெல்லி முழுக்க தண்ணீர் குளம் போன்று தேங்கி நிற்கிறது. வாகனங்கள் நீரில் மூழ்கின. டெல்லியை சுற்றியுள்ள ஜங்புறா, ஆர்.கே. ஆஷ்ரம் உள்பட பல்வேறு பகுதிகளிலும் கனமழை காரணமாக வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.   

டெல்லியின் வசந்த விகார் பகுதியில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த கட்டிடத்தில் பணியாற்றிய பணியாளர்கள் அங்கிருந்த பள்ளத்தில் விழுந்தனர். இவர்களை மீட்கும் பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டனர்.   டெல்லி முழுக்க கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருக்கிறது. சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் சில பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 days 22 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 days 23 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து