முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தல் பணி செய்த போலீசாருக்கு பயணப்படி வழங்கப்படவில்லை : அண்ணாமலை குற்றச்சாட்டு

சனிக்கிழமை, 29 ஜூன் 2024      தமிழகம்
Annamalai 1

Source: provided

 சென்னை : பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்ட போலீசாருக்கு வழங்கப்பட வேண்டிய பயணப்படி இன்னும் வழங்கப்படாமல் இருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

தேவையில்லாத வீண் விளம்பரங்களுக்கு, பல கோடி ரூபாய் மக்களின் வரிப்பணத்தை செலவு செய்வதில் தி.மு.க., அரசு முனைப்பாக இருக்கிறது' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,

தமிழகத்தில், பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்ட போலீசாருக்கு வழங்கப்பட வேண்டிய பயணப்படி இன்னும் வழங்கப்படாமல் இருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. 

கடந்த மார்ச் 16, 2024 முதல் ஜூன் 6, 2024 வரையிலான 83 நாட்களுக்கான பயணப்படி வழங்க ஒப்புதல் அளித்து கடந்த ஏப்ரல் மாதமே அரசாணை பிறப்பித்த பிறகும், இன்னும் போலீசாருக்கான பயணப்படி வழங்கப்படவில்லை.

ஏற்கனவே, அவர்களின் கைகளைக் கட்டிப் போட்டு, சட்டம் ஒழுங்கைச் சீர்குலைத்து வைத்திருக்கிறது தி.மு.க. அரசு.  உடனடியாக, தேர்தல் பணிகளில் ஈடுபட்ட போலீசார்களுக்கு, 83 நாட்களுக்கான பயணப்படியை வழங்க வேண்டும். இவ்வாறு அண்ணாமலை அந்த பதிவில் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 days 22 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 days 23 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து