முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விரைவில் சேலம், கோவையில் செயற்கை கருத்தரிப்பு மையம் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சனிக்கிழமை, 29 ஜூன் 2024      தமிழகம்
Ma-Subramanian 2023-10-13

Source: provided

சென்னை : சேலம், கோவை அருசு மருத்துவமனையில் செயற்கை கருத்தரிப்பு மையம் இந்த ஆண்டு செயல்பாட்டிற்கு வரும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

எழும்பூர் அரசு மருத்துவமனையிலும், மதுரையில் ராஜாஜி மருத்துவமனையிலும் செயற்கை கருத்தரித்தல் மையம் தொடங்கப்படும் என்று 2022-23-ஆம் ஆண்டு மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் நாட்டிலேயே முதல்முறையாக ரூ.6.97 கோடி மதிப்பீட்டில் வெளிநாடுகளிலிருந்து அதிநவீன மருத்துவ உபகரணங்கள் கொண்ட சென்னை, எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள இலவச செயற்கை கருத்தரிப்பு மையம் மற்றும் பிரசவ வளாகத்தை ஜூன் 7 ஆம் தேதி மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பொது மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் இரண்டாவது செயற்கை கருத்தரித்தல் மையம் தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும், மிக விரைவில் அந்த மையமும் திறந்து வைக்கப்பட இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், பேரவையில் சோழவந்தான் சட்டப்பேரவை உறுப்பினர் வெங்கடேசன் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளிக்கையில், எழும்பூர் அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் செயற்கை கருத்தரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் செயற்கைக் கருத்தரிப்பு மையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சேலம், கோவை அரசு மருத்துவமனையில் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் இந்த ஆண்டு செயல்பாட்டிற்கு வரும்.

மேலும் தனியார் மருத்துவமனைகள் மட்டுமல்ல, நாட்டில் வேறு எந்த அரசு மருத்துவமனைகளிலும் இல்லாத சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ, டிஜிட்டல் எக்ஸ்-ரே, ரோபோடிக் அறுவை சிகிச்சை கருவிகள் உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பம் வாய்ந்த கருவிகள் பல, தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பயன்பாட்டில் உள்ளன என அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 days 22 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 days 23 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து