முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திகார் சிறையில் உள்ள என்ஜினீயர் ரஷீத் எம்.பி.யாக பதவியேற்க தேசிய புலனாய்வு முகமை அனுமதி

திங்கட்கிழமை, 1 ஜூலை 2024      இந்தியா
Rashid-MP 2024-07-01

Source: provided

புதுடெல்லி : டெல்லி திகார் சிறையில் உள்ள என்ஜினியர் ரஷீத் எம்.பி.யாக பதவியேற்க என்.ஐ.ஏ. அனுமதி அளித்துள்ளது. 

ஜம்மு-காஷ்மீரில் செயல்பட்டு வரும் அவாமி இத்தேஹாத் கட்சி தலைவர் ஷேக் அப்துல் ரஷீத் என்ற என்ஜினீயர் ரஷீத் (56). இவர் 2004 மற்றும் 2014-ல் லாங்கேட் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பின்னர், 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட அவர் அதில் தோல்வியடைந்தார். 

இதற்கிடையே, பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டிய வழக்கில் 2019-ம் ஆண்டு என்ஜினீயர் ரஷீத்தை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) கைது செய்தது. கைது செய்யப்பட்ட ரஷீத் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

அதே வேளை, கடந்த பாராளுமன்ற தேர்தலில் என்ஜினீயர் ரஷீத் காஷ்மீரின் பாரமுல்லா தொகுதியில் சுயேட்சையாக  சிறையில் இருந்தவாறு  போட்டியிட்டார்.  அவருக்கான தேர்தல் பிரச்சார பணிகளை அவரது மகன்கள் அப்ரர் ரஷீத், அஸ்ரத் ரஷீத் மேற்கொண்டனர். 

பாராளுமன்ற தேர்தலில் பாரமுல்லா தொகுதியில் என்ஜினீயர் ரஷீத் வெற்றி பெற்றார். தேர்தலில் வெற்றி பெற்ற போது பயங்கரவாத வழக்கில் சிறையில் உள்ள ரஷீத் இதுவரை எம்.பி.யாக பதவியேற்கவில்லை. 

இதையடுத்து, எம்.பி.யாக பதவியேற்க தனக்கு ஜாமீன் வழங்கும்படி என்ஜினீயர் ரஷீத் டெல்லி சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு, இந்த வழக்கில் என்.ஐ.ஏ. பதில் அளிக்க உத்தரவிட்டது.

இந்நிலையில், சிறையில் உள்ள என்ஜினீயர் ரஷீத் எம்.பி.யாக பதவியேற்க அனுமதிப்பதாக டெல்லி கோர்ட்டில் என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது. அதேவேளை, பதவியேற்பு நடைமுறைகளை ஒரே நாளில் முடிக்க வேண்டும் எனவும், இந்த நடைமுறையின்போது என்ஜினீயர் ரஷீத் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கக் கூடாது என்றும் டெல்லி ஐகோர்ட்டில் என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது.

என்.ஐ.ஏ.  பதில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் என்ஜினீயர் ரஷீத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று டெல்லி கோர்ட்டில் நடைபெற  உள்ளது  குறிப்பிடத்தக்கது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து