முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரம்: 11 பேரை 3 நாள் சி.பி.சி.ஐ.டி. காவலில் விசாரிக்க அனுமதி : கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு

திங்கட்கிழமை, 1 ஜூலை 2024      தமிழகம்
CBCID

Source: provided

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பாக, கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள 11 பேரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய உயிரிழப்பு தொடர்பாக, கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள 21 பேரில், 11 பேரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க, சிபிசிஐடி போலீஸார் கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஜூன் 28-ம் தேதி மனுத்தாக்கல் செய்திருந்தனர். அந்த மனு நேற்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு வந்தது.

கள்ளச் சாராய உயிரிழப்பு தொடர்பாக, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கன்னுக்குட்டி(எ) கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா மற்றும் சின்னதுரை, நடுப்பையன், கதிரவன், கண்ணன், மாதேஷ், சக்திவேல், சிவக்குமார், பென்சிலால்,கௌதம்சந்த் ஜெயின் ஆகிய 11 பேரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க, சிபிசிஐடி போலீஸார் கடந்த 28-ஆம் தேதி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.   

இதனைத்தொடர்ந்து, நேற்று 11 பேரையும் சி.பி.சி.ஐ.டி போலீஸார் கள்ளக்குறிச்சி மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதைத்தொடர்ந்து வரும் புதன்கிழமை மாலை வரை சி.பி.சி.ஐ.டி காவலில் விசாரிப்பதற்கு நீதிபதி ஸ்ரீராம் உத்தரவிட்டார். இதையடுத்து , போலீஸார் விசாரணைக்காக 11 பேரையும் அழைத்துச் சென்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து