முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீட் தேர்வு குறித்த வழக்கு முடிந்தால்தான் மருத்துவ மாணவர் சேர்க்கை குறித்து முடிவு எடுக்கப்படும் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

திங்கட்கிழமை, 1 ஜூலை 2024      தமிழகம்
Ma Subramani-2023-11-09

Source: provided

சென்னை : மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. வழக்கு முடிந்தால்தான் இந்தாண்டு மருத்துவ மாணவர் சேர்க்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மக்களைத்தேடி மருத்துவத் திட்டம் குறித்து பேச அமெரிக்க பல்கலை., அழைப்பு விடுத்துள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் பெருமிதம் தெரிவித்தார். சென்னை வேளச்சேரியில் மருத்துவத்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “சென்னை சைதாப்பேட்டையில் சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சைதாப்பேட்டையில் குடிநீரில் கழிவுநீர் கலந்தது என்றால் மற்ற யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லையே. அங்குள்ள அனைத்து வீடுகளிலும் நேரடியாக கேட்டு வருகிறோம்; யாருக்கும் பாதிப்பில்லை. சைதாப்பேட்டை சிறுவன் மரணம் தொடர்பான மருத்துவ அறிக்கை 2 நாட்களில் வந்துவிடும். இன்று முதல் ஆக.31 வரை வயிற்றுப்போக்கு தடுப்பு, ஏ வைட்டமின் முகாம் நடைபெறும்.

1 முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஓ.ஆர்.எஸ். மற்றும் 14 ஜிங்க் மாத்திரைகள் வழங்கப்படும். அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் ஓ.ஆர்.எஸ். மற்றும் 14 ஜிங்க் மாத்திரைகள் வழங்கப்படும்.”மக்களைத்தேடி மருத்துவத் திட்டம் குறித்து பேச அமெரிக்க பல்கலை., அழைப்பு விடுத்துள்ளது. ஹார்வேர்ட் பல்கலை.,யில் ‘மக்களை தேடி மருத்துவம்” குறித்து மாணவர்களிடம் உரையாற்ற உள்ளேன். மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. வழக்கு முடிந்தால்தான் இந்தாண்டு மருத்துவ மாணவர் சேர்க்கை குறித்து முடிவு எடுக்கப்படும். தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடர்பாக புகாரளிக்கப்பட்டுள்ளது,”இவ்வாறு தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து