முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் 16 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்: மக்கள் நல்வாழ்வுத் துறை புதிய செயலாளராக சுப்ரியா நியமனம்

திங்கட்கிழமை, 1 ஜூலை 2024      தமிழகம்
TN 2023-04-06

Source: provided

சென்னை : தமிழக அரசின் முக்கிய துறைகளின் செயலாளர்கள் அதிரடியாக இடம் மாற்றப்பட்டனர். நீர்வளம், வனத்துறை செயலர்கள் உள்ளிட்ட 16 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வனத்துறை செயலாளராக இருந்த சுப்ரியா சாஹூ மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளராக இருந்த ககன்தீப் சிங் பேடி அப்பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டு ஊரக வளர்ச்சி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் செயலாளராக இருந்த பிரதீப் யாதவ் உயர்கல்வி துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சுற்றுலா, இந்து சமய அறநிலையத் துறை செயலாளராக இருந்த கே.மணிவாசன் நீர் வளத்துறை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். நீர்வளத்துறை செயலராக இருந்த சந்தீப் சக்சேனா தமிழ்நாடு செய்தித்தாள் காகித தொழிற்சாலையின் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பொதுப்பணித் துறை செயலாளராக இருந்த பி.சந்திரமோகன், தற்போது இந்து சமய அறநிலையத் துறை மற்றும் சுற்றுலாத்துறை செயலாளராக நியமனம். கால்நடை, பால்வளம், மீன்வளத்துறை செயலராக இருந்த மங்கத் ராம் சர்மா புதிய பொதுப்பணித் துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக இருந்த செந்தில்குமார், வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு சாலை பிரிவு திட்டம்-2 திட்ட இயக்குனர் ஆர்.செல்வராஜ் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு அரசு கேபிள்டிவி மேலாண் இயக்குனராக இருந்த ஏ. ஜான் லூயிஸ், தற்போது தமிழக அரசின் சமூக பாதுகாப்பு திட்ட இயக்குநராக நியமனம். வீட்டுவசதித்துறை கூடுதல் செயலர் எம்.விஜயலட்சுமி ஐ.ஏ.எஸ்., இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நில சீர்திருத்தத்துறை ஆணையர் வெங்கடாசலம் ஐ.ஏ.எஸ்., தமிழக அரசின் தமிழ்நாடு ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்ட இயக்குனர் டி.என்.ஹரிஹரன் ஐ.ஏ.எஸ்., நில சீர்திருத்த துறை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நகராட்சி நி்ர்வாகத்துறை முன்னாள் சிறப்பு செயலர் ஆர்.லில்லி ஐ.ஏ.எஸ்., போக்குவரத்துத் துறை சிறப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன தலைவர் மற்றும் மேலாண் இயக்குனராக இருந்த சாய் குமார் ஐ.ஏ.எஸ்., தமிழக தொழில் முதலீட்டு கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தலைவர் சி.என்.மகேஸ்வரன், தமிழ்நாடு உப்புக்கழக மேலாண் இயக்குனராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். செய்தி துறை இயக்குனர் வைத்தியநாதன் ஐ.ஏ.எஸ்., தமிழ்நாடு கேபிள் டிவியின் நிர்வாக இயக்குநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்ட இயக்குனர் டி.எஸ்.ஜவஹர் ஐ.ஏ.எஸ்., சமூக சீர்திருத்த துறை செயலாளராக கூடுதல் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து