முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்முனை போட்டியில் வெல்லப்போவது யார்? - விக்கிரவாண்டியில் இன்று ஓட்டுப்பதிவு : இடைத்தேர்தல் முன்னேற்பாடு பணிகள் அனைத்தும் தயார்

செவ்வாய்க்கிழமை, 9 ஜூலை 2024      தமிழகம்
Vote 2024-01-05

Source: provided

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறவுள்ள நிலையில் தி.மு.க., பா.ம.க., நா.த.க. இடையேயான மும்முனை போட்டியில் வெல்லப்போவது யார் என்பது வரும் சனிக்கிழமை வெளியாகும் முடிவுகளில் தெரிய வரும். இதற்கிடையே இடைத்தேர்தலுகான பாதுகாப்பு உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

போட்டியிடவில்லை...

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் 6-ந் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இதையடுத்து, இந்த தொகுதிக்கு இன்று (ஜூலை 10-ந் தேதி) இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை. தி.மு.க. சார்பில் அன்னியூர் சிவா, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா உள்பட 29 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

தீவிர பிரசாரம்... 

விக்கிரவாண்டி தொகுதியில் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு பிரசாரம் முடிவடைந்தது. இன்று விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடக்கிறது. விக்கிரவாண்டி தொலுதியில் 1,16,962 ஆண் வாக்காளர்களும், 1,20,010 பெண் வாக்காளர்களும், 29 இதர பாலினத்தவர் என மொத்தம் 2,37,011 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 

வரும் சனிக்கிழமை...

வாக்கு எண்ணிக்கை வரும் 13-ம் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இடைத்தேர்தலுக்காக 138 மையங்களில், 276 வாக்குச்சாவடிகள் அமிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பனையபுரம், குண்டலபுலியூர், ராதாபுரம் கிராமங்களில் உள்ள வாக்குச்சாவடி மையங்கள் மிக பதட்டமானவை என கண்டறாயப்பட்டுள்ளன. மேலும் பதட்டமானதாக 42 வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. இங்கு கூடுதல் பாதுகாப்புக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அங்கு துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

3 ஆயிரம் போலீசார்... 

வடக்கு மண்டல ஐ.ஜி.நரேந்திர நாயர் மேற்பார்வையில் டி.ஐ.ஜி. திஷா மிட்டல் தலைமையில் 3 எஸ்.பி.க்களின் கண்காணிப்பில் 700 சிறப்பு போலீஸ் படையினர், 220 துணை ராணுவத்தினர் உள்பட 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக நேற்று காலை முதல், விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து, அந்தந்த வாக்குப்பதிவு மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவுக்கான அடையாள மை உள்ளிட்ட பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

டாஸ்மாக் கடைகள்...

நேற்று முன்தினம் முதல் இன்று வரை 3 நாட்களுக்கும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் தினமான 13-ந் தேதியும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் மற்றும் விக்கிரவாண்டி தொகுதியையொட்டி உள்ள புதுவை மதுக்கடைகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் விக்கிரவாண்டி தொகுதியில் வாக்குரிமை உள்ள வாக்காளர்கள் தமிழ் நாட்டில் எந்த பகுதியில் தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றினாலும் அவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் விக்கிரவாண்டி தொகுதிக்கு இன்று பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் அதிகாரி....

இதற்கிடையே முன்னேற்பாட்டு பணிகள் சிறப்பாக நடைபெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான பழனி தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது:-  1,16,962 ஆண் வாக்காளர்களும், 1,20,040 பெண் வாக்காளர்களும், 29 மாற்று பாலினத்தவர் என மொத்தமாக 2,37,031 வாக்காளர்கள் உள்ளனர்.  276 வாக்குச்சாவடி மையங்களில் 662 வாக்குப்பதிவு கருவிகளும் (Ballot Unit). 330 கட்டுப்பாட்டு கருவிகளும் (Control Unit) மற்றும் 357 வாக்குப்பதிவினை உறுதி செய்யும் கருவிகள் (VVPAT) என மொத்தம் 1349 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.  பதற்றமான வாக்குச்சாவடி 45 உள்ளதால் அங்கு பணிபுரிய 53 நுண்பார்வையாளர்கள் பணியில் இருப்பார்கள். தொகுதிக்கு உட்பட்ட அரசு, அரசு சார் அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள், பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என கூறினார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து