முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.சி.சி.யின் விருதை வென்ற பும்ரா

செவ்வாய்க்கிழமை, 9 ஜூலை 2024      விளையாட்டு
Bumra 2023-09-08

Source: provided

துபாய் : ஐசிசியின் ஜூன் மாதத்துக்கான சிறந்த வீரருக்கான விருதினை இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா வென்றுள்ளார்.

ஜூன் மாதத்திற்கு... 

டி20 உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி உலகக் கோப்பையை கைப்பற்றியது. டி20 தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்ட ஜஸ்பிரித் பும்ராவுக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த நிலையில், ஐசிசியின் ஜூன் மாதத்துக்கான சிறந்த வீரருக்கான விருதினை ஜஸ்பிரித் பும்ரா வென்றுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. ரோஹித் சர்மா, ரஹ்மனுல்லா குர்பாஸ் ஆகியோர் விருதுக்கான போட்டியில் இருந்தபோதிலும், அவர்களை பின்னுக்குத் தள்ளி விருதினை தட்டிச் சென்றுள்ளார் ஜஸ்பிரித் பும்ரா.

மிகுந்த மகிழ்ச்சி...

டி20 உலகக் கோப்பைத் தொடர் முழுவதும் ஜஸ்பிரித் பும்ரா அபாரமாக பந்துவீசினார். அவர் 15 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப்போட்டியிலும் அவர் அபார பந்துவீச்சை வெளிப்படுத்தினார். ஐசிசி ஜூன் மாதத்துக்கான விருதினை வென்றது குறித்து ஜஸ்பிரித் பும்ரா பேசியதாவது: ஜூன் மாதத்துக்கான சிறந்த வீரராக நான் தேர்வு செய்யப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நினைவுகளை உருவாக்கி மகிழ்ச்சியாக கடந்து வந்த எனக்கு, இந்த விருதை மேலும் சிறப்பான கௌரவமாக கருதுகிறேன்.

அனைவருக்கும்.... 

கேப்டன் ரோஹித் சர்மாவுக்கும், ஆப்கானிஸ்தான் வீரர் குர்பாஸுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் இந்த காலக்கட்டத்தில் சிறப்பாக செயல்பட்டார்கள். என்னை வெற்றியாளராக தேர்ந்தெடுத்ததை பணிவுடன் ஏற்றுக் கொள்கிறேன். எனது குடும்பத்தினர், பயிற்சியாளர் மற்றும் அணி வீரர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து