முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் டிசம்பர் மாதத்திற்குள் தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்த தீவிர ஏற்பாடு

செவ்வாய்க்கிழமை, 30 ஜூலை 2024      தமிழகம்
Election 2024-04-08

சென்னை, தமிழ்நாட்டில் கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட மற்றும் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்டன. இந்த உள்ளாட்சிகளுக்கான பதவிக்காலம் வருகிற டிசம்பர் மாதம் முடிவடைகிறது. இதையடுத்து பதவி காலியாகும் ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்த ஆணையம் தயாராகி வருகிறது.

இதன் முதற்கட்டமாக சட்டசபை தொகுதி வாரியாக வாக்காளர் பட்டியல் விவரங்களை தருமாறு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவுக்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் கடிதம் எழுதி உள்ளது. மாநில தேர்தல் ஆணைய செயலாளர் கே.பாலசுப்பிரமணியன் எழுதி உள்ள அந்த கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் உள்ள உள்ளாட்சிகளில் காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்தல்களை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் விரைவில் நடத்த உள்ளது. தற்போதுள்ள சட்டப் பேரவை வாக்காளர் பட்டியல் அடிப்படையில் உள்ளாட்சிகளுக்கான வாக்காளர் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் தேவைப்படும் காலங்களுக்கு தயாரிக்க வேண்டும்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி ஆண்டுதோறும் ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1 மற்றும் அக்டோபர் 1-ந் தேதிகளில் தகுதியானவர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். அதற்கேற்ப மக்கள் பிரதிநிதிகள் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் கடந்த மார்ச் மாதம் 27-ந் தேதி பாராளுமன்ற தேர்தலுக்காக தயாரிக்கப்பட்ட சட்டப் பேரவை தொகுதி வாரியான வாக்காளர் பட்டியல் அடிப்படையில் மாநில தேர்தல் ஆணையம் தற்போது உள்ளாட்சிகளுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை தயாரிக்க வேண்டி உள்ளது.

எனவே கடந்த மார்ச் 28-ந் தேதி சட்டப் பேரவை தொகுதி வாரியாக வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின் அச்சிடப்பட்ட பிரதிகள் மற்றும் மென் பிரதிகளை வழங்கும்படி மாவட்டத் தேர்தல் அதிகாரிகளாக உள்ள மாவட்ட கலெக்டர்களுக்கு தாங்கள் தகுந்த அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். அவ்வாறு பெறப்படும் விவரங்கள் அனைத்தும் உள்ளாட்சித் தேர்தலுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும்.

மாநில தேர்தல் ஆணையம் உரிய கள ஆய்வுகள் நடத்தி சரிபார்த்து தனது சொந்த தரவுகளை உருவாக்கும் தேர்தல் ஆணையம் அளிக்கும் தரவுகளை வேறு யாருக்கும் பகிர மாட்டோம். எனவே தொகுதி வாரியாக தற்போதுள்ள புதிய வாக்காளர் பட்டியல் தரவுகளை அளிக்க அறிவுறுத்த வேண்டும். உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பை தகுந்த நேரத்தில் மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியிடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து