முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒட்டுமொத்த நாடும் வயநாடு மக்களுடன் நிற்கிறது: கார்கே

செவ்வாய்க்கிழமை, 30 ஜூலை 2024      இந்தியா
Mallikarjuna-Karke 2023 02

புதுடெல்லி, ஒட்டுமொத்த நாடும் வயநாடு மக்களுடன் நிற்கிறது என்று பாராளுமன்ற  மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார்.

கேரள மாநிலம் வயநாட்டில் பெய்த கனமழையால் நள்ளிரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி இதுவரை பலியானோர் எண்ணிக்கை 84 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களை ஹெலிகாப்டர் மூலமாக மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. பலரின் நிலை என்னவென்று தெரியாததால் பலி எண்ணிக்கை உயரலாம் என்று அஞ்சப்படுகிறது.

இந்த நிலையில், வயநாடு நிலச்சரிவு குறித்து மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசியதாவது:-

கேரள மாநிலம் வயநாட்டில் நேற்று முன்தினம் நள்ளிரவு நிலச்சரிவு ஏற்பட்டதாக தெரிகிறது. நிலச்சரிவு காரணமாக மண்ணுக்கடியில் சிக்கியுள்ளவர்கள் பற்றிய விவரங்கள் தெரியவில்லை. இந்நேரத்தில் ஒட்டுமொத்த இந்தியாவும் வயநாடு மக்களுடன் நிற்கிறது. மாநிலங்களவை தலைவர் நீங்கள் எங்களுக்கு தகவலை கொடுக்கிறீர்கள் ஆனால் நாங்கள் மத்திய அரசிடமிருந்து முழு தகவல்களை எதிர்பார்க்கிறோம்.

வயநாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது?. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளுக்கு இந்திய ராணுவம் சென்றுள்ளதா?. மீட்பு பணி நடவடிக்கைகளின் தற்போதைய நிலைமை என்ன?. வயநாடு நிலச்சரிவு சம்பவம் தொடர்பான தகவல்களை மத்திய அரசு வெளிப்படையாக தெரியப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து