முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய எல்லையில் உள்ள சீன ராணுவ வாகனங்கள்..? சாட்டிலைட் காட்சியால் பரபரப்பு

செவ்வாய்க்கிழமை, 30 ஜூலை 2024      இந்தியா
China-Border

Source: provided

லடாக்: இந்திய எல்லையில் உள்ள சீனாவின் பாலத்தில் ராணுவ வாகனங்கள் இருக்கும் சாட்டிலைட் காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லடாக்கில் இந்திய - சீன எல்லைப்பகுதியில் உள்ள பாங்காங் நதியின் குறுக்கே 400 மீட்டர் பாலத்தைச் சீனா கட்டி முடித்தது. இந்த பலமானது சீன துருப்புகள் பாங்காங் நதியின் வடக்கு மற்றும் தெற்கு கரைகளுக்கு எளிதாகச் சென்று வர உதவும் வகையில் திட்டமிடப்பட்டு கட்டப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இந்திய எல்லையில் கட்டப்பட்டுள்ள இந்த பாலம் இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகுந்த அச்சுறுத்தலாக அமைத்துள்ளது என்று வல்லுநர்கள் கருதுகின்றனர்.

பாலம் கட்டப்பட்டுள்ள பகுதியானது கடந்த 1958 முதல் சீனாவின் ஆக்கிரமிப்பில் இருந்து வருகிறது. ஆனால் அந்த இடத்தின்மீது சீனா உரிமை கொண்டாடுவதற்கு எதிரான நிலைப்பதிலேயே இந்தியா இருந்து வருகிறது. தற்போது கட்டப்பட்டுள்ள இந்த பாலமானது நதியைக் கடக்க 50 - 100 கிலோமீட்டர்கள் வரை பயணிக்க வேண்டிய நேரத்தைக் குறைத்து எளிதாக ராணுவத்துருப்புகள் சென்று வருவதற்கு வழிவகை செய்கிறது.

பலமானது கட்டப்பட்டது முதல் பயன்பாட்டில் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது பாலத்தின்மீது  வாகனங்கள் கடக்கும் சேட்டிலைட் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் பகுதிகளுக்கு சீனா தங்களின் வரைபடத்தில் புதிய பெயர்களை சூட்டியும், எல்லையில் ராணுவ நடவைடிகைகளை அதிகப்படுத்தியும் வருவது இந்தியாவுக்குச் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது.

சமீபத்தில் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் இ மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கர் சந்திப்பில் எல்லையில் உள்ள படைகளைத் திரும்பப் பெறுவதற்கான பேச்சுவார்த்தை நடந்துள்ளது. ஆனால் இப்போது வெளியாகியுள்ள இந்த சாட்டிலைட் புகைப்படங்கள் பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து