முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழம்பெரும் பிரான்ஸ் நடிகர் அலைன் டெலோன் மறைவு

திங்கட்கிழமை, 19 ஆகஸ்ட் 2024      உலகம்
Alain-Delon 2024 08 19

Source: provided

பாரீஸ் : பிரான்ஸ் நாட்டின் மூத்த   நடிகர் அலைன் டெலோன் காலமானார். அவரது மறைவுக்கு பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் இரங்கல் தெரிவித்துள்ளார்.  

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பழம்பெரும் நடிகரும், ஆரம்ப கால பிரஞ்சு சினிமாவின் ஸ்டைல் ஐகானாக திகழ்ந்தவருமான அலைன் டெலோன்(88).    உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம்  காலமானார். 

உலக சினிமாவில் புரட்சியை ஏற்படுத்திய பிரஞ்சு நியூ வேவ் சினிமாட்டிக் இயக்கத்தின் முக்கிய  முகங்களும் ஒருவராக திகழ்ந்தவர் அலைன் டெலோன்.  பர்பில் நூன், லே சாமுராய் உள்ளிட்ட படங்கள் மூலம் அலைன் டெலோன் உலகப் புகழ்பெற்றார். 

2019-ம் ஆண்டு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட பிறகு அவர் நிலை மோசமடைந்து வந்தது. இதற்கிடையில்கேன்சர் நோயுடனும் போராடி வந்த அவர் நேற்று முன்தினம் அதிகாலை  தனது வீட்டில் மனைவி மற்றும் 3 குழந்தைகள் சூழ அமைதியான முறையில் உயிரிழந்துள்ளார். 

அலைன் டெலோனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், சிறப்பு வாய்ந்த பாத்திரங்களை ஏற்று நடித்து உலகைக் கனவு காண வைத்தவர் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் உலகம் முழுவதிலும் உள்ள  இயக்குநர்கள், நடிகர்கள்  மற்றும் சினிமா ரசிகர்கள்  அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து