முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகாராஷ்டிராவில் அதிர்ச்சி சம்பவம்: பள்ளி குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் : பெற்றோர்கள் போராட்டம்-போலீஸ் தடியடி

செவ்வாய்க்கிழமை, 20 ஆகஸ்ட் 2024      இந்தியா
Maha 2024-08-20

Source: provided

மும்பை : மகாராஷ்டிராவில் பள்ளியில் படிக்கும் 4 வயது இரண்டு பெண் குழந்தைகளுக்கு பாலியல் ரீதியில் துன்புறுத்தல் செய்த துப்புரவு தொழிலாளியை கண்டித்து பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தின் பத்லாபூர் பகுதியில் ஆங்கிலப்பள்ளி ஒன்று செயல்படுகிறது. இங்கு ஆக.,16ம் தேதியன்று கழிப்பறையில் நான்கு வயதான இரண்டு பெண் குழந்தைகளுக்கு, அங்கு பணியாற்றும் 23 வயதான துப்புரவு தொழிலாளி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இதனடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், துப்புரவு தொழிலாளியை கைது செய்தனர். இது குறித்து பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பினர். இதற்கு சரியான பதில் கிடைக்கவில்லை.

ஆத்திரமடைந்த மக்கள் நேற்று ( ஆக.,20) பள்ளி முன் குவிந்தனர். பிறகு, அருகில் இருந்த ரயில் நிலையத்திற்கு சென்று, தண்டவாளத்தில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதுடன், கோஷம் எழுப்பினர். இதனால், அப்பாதையில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சில ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. உள்ளூர் ரயில்கள் ரத்தாகின. போலீசார், ரயில்வே அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையல் கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தியதால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து