முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உணவு பாதுகாப்பு குறியீட்டில் தொடர்ந்து 2-வது ஆண்டாக கேரள மாநிலம் முதலிடம் : தமிழகம் இரண்டாமிடம் பெற்றுள்ளது

சனிக்கிழமை, 21 செப்டம்பர் 2024      இந்தியா
Food-price-2024-07-22

Source: provided

திருவனந்தபுரம் : உணவு பாதுகாப்பு குறியீட்டில் கேரளா தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக முதலிடத்தை பிடித்துள்ளது. தமிழகம் இரண்டாமிடம் பெற்றுள்ளது.

ஆண்டுதோறும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையத்தால்  உணவு பாதுகாப்பு குறியீடு மாநில பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. ஓட்டல்கள், உணவுப்பொருட்கள் விற்பனை நிறுவனங்களில் செய்யப்பட்ட மதிப்பீடுகள், பதியப்பட்ட வழக்கு, எடுக்கப்பட்ட நடவடிக்கை அடிப்படையில் உணவுப் பாதுகாப்பு குறியீடு நிர்ணயம் செய்யப்படுகிறது.

அதன்படி இந்த ஆண்டுக்கான பட்டியலில் கேரள மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது. தொடரந்து இரண்டாம் ஆண்டாக, கேரளா இந்த இடத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

கடந்த 2022-ம் ஆண்டில், கேரளா இரண்டாவது இடத்தைப் பிடித்தது. கடந்த ஆண்டு மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்ட தமிழகம், இம்முறை இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் வெளியிடப்படும் குறியீட்டில் ஜம்மு காஷ்மீர் மூன்றாவது இடத்தைப் பிடித்து வருகிறது.

இது குறித்து மத்திய உணவுத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறுகையில், 

நாம் உட்கொள்ளும் உணவின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வது முக்கியம். ஆரோக்கியமான தேசத்தை உருவாக்குவதற்கு உணவின் தரம் மற்றும் பாதுகாப்பின் முக்கியம் அவசியம்.விதிமுறைகளின் தரநிலைகளை அமைப்பது அரசின் முதன்மைக் கடமை. பாதுகாப்பான உணவு மக்களை சென்றடைவதை உறுதி செய்வதில் எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.(FSSAI) முக்கிய பங்கு வகிக்கிறது என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து