முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி முதல்வராக பதவியேற்றார் அதிஷி: கவர்னர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்

சனிக்கிழமை, 21 செப்டம்பர் 2024      இந்தியா
Adishi 2024-02-04

புதுடெல்லி, டெல்லி முதல்வராக இருந்த கெஜ்ரிவால், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட் கடும் நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியது. முதல்வர் அலுவலகம் செல்லக் கூடாது. முதல்வராக கோப்புகளை கையாளக் கூடாது என நிபந்தனை விதித்தது.

சிறையில் இருந்து வெளியே வந்த அரவிந்த் கெஜ்ரிவால் நான் நேர்மையானவன் என்று மக்கள் தீர்ப்பளிக்கும் வரை முதல்வர் நாற்காலியில் அமரமாட்டேன் என்று கூறி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து டெல்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் டெல்லியின் புதிய முதல்வராக மூத்த அமைச்சர் அதிஷி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பின்னர் டெல்லி துணை நிலை கவர்னரை சந்தித்து அரவிந்த் கெஜ்ரிவால் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். தொடர்ந்து புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான கடிதத்தை கவர்னரிடம் கொடுத்து புதிய அரசு அமைக்க அதிஷி உரிமை கோரினார். இதையடுத்து, டெல்லி துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனா, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ராஜினாமா கடிதத்தையும், புதிய முதல்வராக அதிஷி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான கடிதத்தையும் ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு அனுப்பினார்.

கெஜ்ரிவாலின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி திரெளபதி முர்மு, அதிஷி மற்றும் 5 அமைச்சர்கள் நியமனத்திற்கும் அனுமதியளித்துள்ளார். இந்த நிலையில் டெல்லியின் புதிய முதல்வராக அதிஷி நேற்று மாலை பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு அம்மாநில துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனா பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

டெல்லி துணை நிலை கவர்னர் இல்லத்தில் நடைபெற்ற இந்த விழாவில் அரவிந்த் கெஜ்ரிவால், மணிஷ் சிசோடியா, பாஜக மாநில தலைவர், டெல்லி சட்டமன்ற உறுப்பினர்களும் ஆகியோர் பங்கேற்றனர். இதில் அதிஷியுடன் 5 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்களாக பதவியேற்கின்றனர். முதல்வர் அதிஷி தொடர்ந்து புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 5 அமைச்சர்களான கோபால் ராய், சவுரப் பரத்வாஜ், இம்ரான் ஹூசைன், முகேஷ், கைலாஷ் கெலாட் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.

பா.ஜ.க.வின் சுஷ்மா சுவராஜ், காங்கிரசின் ஷீலா தீட்சித் ஆகியோருக்குப் பிறகு டெல்லியின் முதல்வராக பதவியேற்ற 3-வது பெண் அதிஷி ஆவார். மேலும், டெல்லியின் இளம் வயது முதல்வர் என்ற பெருமையையும் அதிஷி பெறுகிறார். பதவியேற்புக்கு பிறகு 26 மற்றும் 27-ந் தேதிகளில் சட்டசபை சிறப்பு கூட்டம் நடைபெறும். அதில் தனது ஆட்சி பெரும்பான்மையை அதிஷி நிரூபிப்பார். 70 பேர் கொண்ட டெல்லி சட்டசபையில் 61 இடங்களை ஆம் ஆத்மி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து