முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தண்டவாளத்தில் கிடந்த டெட்டனேட்டர்கள்: ம.பி.யில் ராணுவ வீரர்களுடன் வந்த ரயிலை கவிழ்க்க முயற்சி

ஞாயிற்றுக்கிழமை, 22 செப்டம்பர் 2024      இந்தியா
MP 2024-03-22

Source: provided

போபால் : ம.பி.யில் ராணுவ வீரர்களுடன் ரயில் வந்த பாதையில் 10 டெட்டனேட்டர்கள் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ரயிலை கவிழ்க்க நடந்த சதியா என்ற கோணத்தில் பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் தேசிய புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

காஷ்மீரில் இருந்து ராணுவ வீரர்களுடன் கர்நாடகாவிற்கு சிறப்பு ரயில் வந்து கொண்டு இருந்தது. ம.பி. மாநிலம் புர்ஹன்பூர் மாவட்டச்தில் சக்பதா ரயில் நிலையத்தை நெருங்கிய போது, திடீரென சத்தம் கேட்டது. உடனடியாக சுதாரித்த டிரைவர் ரயிலை நிறுத்தினார். 

கிழே இறங்கி வந்து பார்த்த போது, அங்கு 10 டெட்டனேட்டர்கள் கிடந்தது தெரிந்தது. இதில் யாருக்கும் காயமில்லை. இது குறித்து ரயில் டிரைவர், ஸ்டேசன் மாஸ்டருக்கு தகவல் கொடுத்தார். 

சம்பவ இடத்திற்கு பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து