முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என்னை ஊழல்வாதியாக சித்தரிக்க பிரதமர் நரேந்திர மோடி சதி செய்கிறார் : கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

ஞாயிற்றுக்கிழமை, 22 செப்டம்பர் 2024      இந்தியா
Kejriwal 2024-03-22

Source: provided

புதுடெல்லி : என்னை ஊழல்வாதியாக சித்தரிக்க பிரதமர் மோடி சதி செய்கிறார் என்று டெல்லி முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டியுள்ளார். 

டெல்லி மதுபான கொள்கை வழக்கில்  கைதாகி திகார் சிறையில் இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் 6 மாதங்கள் கழித்து ஜாமீனில் வெளிவந்துள்ள நிலையில் தனது முதல்வர் பதவியை  ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து அம்மாநில கல்வி அமைச்சர் அதிஷி  டெல்லி முதல்வராக பதவியேற்றார். 

இந்நிலையில் நேற்று ஜந்தர் மந்தரில் நடந்த ஜனதா கி அதாலத் நிகழ்வில் பங்கேற்று  அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது, 

கடந்த 10 வருடங்களாக டெல்லி அரசை  நேர்மையாக நடத்தி வந்தேன். எனவே என்னை ஜெயிக்க ஒரே வழி எனது நேர்மையின் மீது களங்கத்தை ஏற்படுத்துவதுதான் என்று மோடி கண்டுகொண்டார்.  எனக்கு நாற்காலி பசி இல்லை. எனவே நான் ராஜினாமா செய்தேன். 

நான் இங்கே பணம் சம்பாதிக்க வரவில்லை. நாட்டின் அரசியலை மாற்ற வந்தேன். இன்னும் ஓரிரு நாட்களில் நான் எனக்கு வழங்கப்பட முதலமைச்சர் குடியிருப்பை விட்டு வெளியேறுவேன். 10 வருடங்களாக முதல்வர் பதவியில் இருந்தும் இதன்பிறகு செல்வதற்கு எனக்கென ஒரு வீடு கூட இல்லை.

பா.ஜ.க. என்னை ஊழல்வாதி என்று கூறிவருவதால் நான் சோகத்தில் தவித்து வருகிறேன். யார் திருடர்கள்? இந்த  கெஜ்ரிவால் நேர்மையானவனாக இல்லையென்றால் இலவச மின்சாரம் வழங்கியிருக்க முடியுமா?, நேர்மையானவனாக இல்லையென்றால்  பெண்களுக்கு இலவச பேருந்து பயணம்  கொண்டு வந்திருக்க முடியுமா? 

குழந்தைகளுக்குத் தரம் வாய்ந்த பள்ளிகளைக் கட்டித் தந்திருக்க முடியுமா? மருத்துவமனைகளில் சிகிச்சைகளை இலவசமாகியிருக்க முடியுமா? தற்போது 22 மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சி அதிகாரத்தில் உள்ளது. அந்த மாநிலங்களில் ஒன்றிலாவது  இலவச மின்சாரமும் ,பெண்களுக்கு இலவச பேருந்து பயணமும் கொண்டுவந்திருக்கிறார்களா?  

இப்போது சொல்லுங்கள் நான் திருடனா? இல்லை என்னை சிறைக்கு அனுப்பியவர்கள் திருடர்களா?. இவ்வாறு கெஜ்ரிவால் சரமாரியாகக் கேள்வியெழுப்பி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து