முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லட்டு குறித்து கருத்து: பவன் கல்யாணிடம் மன்னிப்பு கோரினார் நடிகர் கார்த்தி

செவ்வாய்க்கிழமை, 24 செப்டம்பர் 2024      தமிழகம்
Karthi

சென்னை, லட்டு குறித்து தெரிவித்த கருத்துக்கு ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் கார்த்தி.

96 பட இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தியின் 27-வது படமாக 'மெய்யழகன்' உருவாகியுள்ளது. வரும் 27-ம் தேதி திரைக்கு வரும்நிலையில், படத்தின் தெலுங்கு பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. அந்த விழாவில் தொகுப்பாளர் ஒருவர் லட்டு வேண்டுமா? என கார்த்தியிடம் கேட்டார் அதற்கு கார்த்தி 'அது ரொம்ப சென்ஸிடிவ், எனக்கு வேண்டாம்' என கூறினார். அதனைத்தொடர்ந்து, மோத்தி லட்டாவது வேண்டுமா? என மீண்டும் கேட்ட தொகுப்பாளரிடம், லட்டே வேண்டாம் என கார்த்தி பதில் சொன்னார்.

கார்த்தியின் இந்த பேச்சு வைரலானதையடுத்து, "லட்டை கேலிக்குரிய பொருளாக்குவதா?" என ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், பவன் கல்யாணிடம் நடிகர் கார்த்தி மன்னிப்பு கோரியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'நான் தெரியாமல் பேசிய விஷயங்களுக்காக, உங்கள் மீது வைத்துள்ள மதிப்பால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். வெங்கடேஸ்வராவின் பக்தனாக நம் கலாசாரத்தை எப்போதும் மதிப்பவன் நான்' இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து