முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா-ஆஸி. பாக்ஸிங் டே டெஸ்ட்: 3 மடங்கு அதிகம் விற்ற டிக்கெட்

செவ்வாய்க்கிழமை, 24 செப்டம்பர் 2024      விளையாட்டு
India-Australia 2023-11-22

Source: provided

மெல்போர்ன் : ஆஸ்திரேலியா-இந்தியா அணிகள் மோதும் பாக்ஸிங் டே டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகள் மூன்று மடங்கு அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது.

பரிசுப்பொருள்கள்... 

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, கனடா போன்ற நாடுகளில் கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று கிறிஸ்துவ தேவாலயங்கள் முன்பு பெரிய பெட்டி வைத்து, கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று தேவாலயத்துக்கு வருபவர்கள் அந்தப் பெட்டியில் பணம், பரிசுகள் போன்றவற்றை நன்கொடையாக செலுத்துவார்கள். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாளான டிசம்பர் 26 ஆம் தேதி அன்று அந்தப் பெட்டியைப் பிரித்து அதில் உள்ள பணம், பரிசுப்பொருள்களை வறுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், ஏழை-எளிய மக்களுக்கும் வழங்குவது வழக்கம். இவ்வாறு பெட்டியைத் திறக்கும் நாள்தான் அந்த நாடுகளில் ‘பாக்ஸிங் டே’ என்று அழைக்கப்படுகிறது.

பாக்ஸிங் டே கிரிக்கெட்...

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அடுத்த நாளான, டிசம்பர் 26 ஆம் தேதி தொடங்கும் டெஸ்ட் போட்டி பாக்ஸிங் டே கிரிக்கெட் என்று அழைக்கப்படும். ஆஸ்திரேலியாவில் 1950 ஆம் ஆண்டில் இருந்தே ஆண்டாண்டு காலமாக பாக்ஸிங் டே அன்று சர்வதேசப் போட்டிகள் வழக்கமாக நடத்தப்பட்டு வருகின்றன. நடக்கவிருக்கும் பார்டர்-கவாஸ்கர் கோப்பையில் ஒருபகுதியாக பாக்ஸிங் டே கிரிக்கெட் போட்டி நடத்தப்படவுள்ளது. அதன் தொடர்ச்சியாக மெல்போர்னில் நடைபெறும் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. பாக்ஸிங் டே கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா எந்த அணியுடன் விளையாடினாலும் அதற்கு ரசிகர்களிடம் இருந்து கிடைக்கும் வரவேற்பே தனி.

5.5 மடங்கு உயர்வு...

அந்தவகையில், 90,000 பேர் அமரக்கூடிய மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இந்த ஆண்டு நடைபெறும் பாக்ஸிங் டே கிரிக்கெட்டுக்கான டிக்கெட் விற்பனை மூன்று மடங்கு அதிகளவில் விற்கப்பட்டுள்ளன. கடந்த முறை இந்தியா- ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடருடன் ஒப்பிடும் போது டிக்கெட் விற்பனை 5.5 மடங்கு உயர்ந்துள்ளது.  2018-2019 ஆண்டில் வந்த சுற்றுலாப்பயணிகளை (0.7 சதவீதத்துடன்) ஒப்பிடும்போது, ​​பாக்சிங் டே டெஸ்டுக்கான தற்போதைய டிக்கெட் வாங்குபவர்களில் 3.9 சதவீதம் பேர், இந்திய சுற்றுலாப் பயணிகள் என்று புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்துகின்றன.

எதிர்பார்ப்பு... 

இந்தியா தனது கடைசி 2 சுற்றுப்பயணங்களிலும் பார்டர்- கவாஸ்கர் கோப்பையைத் தக்க வைத்துக் கொண்டது. இதற்கு முன் நடந்த இரண்டு தொடர்களிலும் ஆஸ்திரேலியாவை 2-1 என்ற கணக்கில் தோற்கடித்து கேப்டன்கள் விராட் கோலி மற்றும் அஜிங்க்யா ரஹானே தலைமையின்கீழ் இந்திய அணி வரலாறு படைத்தது. அதே போல நவம்பர் 21 ஆம் தேதி தொடங்கவிருக்கும் பார்டர்-கவாஸ்கர் கோப்பையில் பாட் கம்மின்ஸின் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணியினர் கோப்பை வென்று மீண்டும் வரலாறு படைப்பார்களா என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

டெஸ்ட் போட்டி அட்டவணை:

1) முதல் டெஸ்ட்- பெர்த்- நவம்பர் 22-26.

2-வது டெஸ்ட்- அடிலெய்டு- டிசம்பர் 6-10.

3-வது டெஸ்ட்- பிரிஸ்பேன் - டிசம்பர் 14-18.

4-வது டெஸ்ட் - மெல்போர்ன் -டிசம்பர் 26-30.

5-வது டெஸ்ட் - சிட்னி - ஜனவரி 3-7.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து