முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் மூன்றாக பிரியும், தண்ணீருக்கும் கையேந்தும் : காஷ்மீர் பிரச்சாரத்தில் உ.பி. முதல்வர் யோகி பேச்சு

சனிக்கிழமை, 28 செப்டம்பர் 2024      இந்தியா
Yogi 2023-12-30

Source: provided

லக்னோ : பாகிஸ்தான் ஒவ்வொரு சொட்டு தண்ணிருக்கும் கையேந்தும் நிலை ஏற்படும். மூன்றாக உடையும் என உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார்.

காஷ்மீரில் நடந்த தேர்தல் பிரச்சார பேரணியில் உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது: 

பாகிஸ்தான், தொடர்ந்து பயங்கரவாதத்தை பரப்பி வருகிறது. 1960-ல் இந்திய-பாகிஸ்தான் நதி நீர் ஒப்பந்தத்தை தவறாக பயன்படுத்துகிறது. இப்படியே தொடர்ந்தால், இப்போது பிச்சைப் பாத்திரம் ஏந்திக் கொண்டிருக்கும் பாகிஸ்தான், வரும் காலங்களில் ஓவ்வொரு சொட்டு தண்ணீருக்கும் கையேந்த வேண்டிய நிலை ஏற்படும். அந்நாடு மூன்றாக உடையும்.

பாகிஸ்தான், தற்போது இரண்டு காரணங்களுக்காக, தத்தளித்து வருகிறது. அந்த நாடு, அதன் சொந்த செயல்பாடுகளாலேயே சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளது. பலுசிஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்களை அந்நியர்களை போல நடத்துவதால், அந்த மாநிலத்தவர்கள் யாரும், பாகிஸ்தானுடன் இணைந்திருக்க விரும்பவில்லை.

ஆக்கிரமிப்பு காஷ்மீரை விட்டு பாகிஸ்தான் விலக வேண்டும். பா.ஜ.க. அரசின் நடவடிக்கையால், சிறப்பு அந்தஸ்து தரும் 370-வது பிரிவு மற்றும் 35 ஏ ரத்து நடவடிக்கையால், ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் மற்றும் ஊழல் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் எளிதாக அங்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. 

ஜம்மு-காஷ்மீர், தற்போது பயங்கரவாதம் அச்சுறுத்தலில் இருந்து மாறி சுற்றுலாதலமாக மீண்டும் மாறி வருகிறது. மேலும் டெல்லி-காஷ்மீருக்கு வந்தே பாரத் ரயில் வசதி செய்யப்பட்டுள்ளது.  இங்கிருந்த பகர்வால், குஜ்ஜார், தலித் மற்றும் வால்மீகி சமுதாய பிரிவினர், நீண்ட காலமாக உரிமைகளை பெறக்கூட முடியாமல் தவித்தனர். 

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நடவடிக்கையால், அவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி, அவர்களின் வாழ்க்கை தரம் மேம்பட்டுள்ளது.காஷ்மீரில் ஏற்கனவே இருந்த அரசியல்வாதிகள், வெளிநாடுகளுக்கும், டில்லிக்குமே படையெடுத்தனர். ஜம்மு-காஷ்மீர் வளர்ச்சியை மறந்து விட்டனர்.  இவ்வாறு யோகி ஆதித்யநாத் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 days ago
View all comments

வாசகர் கருத்து