முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் புதிய அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை

ஞாயிற்றுக்கிழமை, 29 செப்டம்பர் 2024      தமிழகம்
Udayanidhi-1 2024-03-29

Source: provided

சென்னை : அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டவர்கள் நேற்று மரியாதை செலுத்தினர்.

தமிழக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டது. இதில் செந்தில் பாலாஜி உள்பட 4 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின் துணை முதல்-அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், புதிய அமைச்சர்களுக்கான பதவி ஏற்பு விழா கவர்னர் மாளிகையில் உள்ள பாரதியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த விழாவில் செந்தில் பாலாஜி, நாசர், கோவி.செழியன், ராஜேந்திரன் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இதனை தொடர்ந்து புதிதாக பதவியேற்ற அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, கோவி.செழியன், ஆர்.ராஜேந்திரன், நாசர் ஆகியோர் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து