முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர காலக்கெடு நிர்ணயிப்பது கடினம் : ரஷ்ய அதிபர் புடின் சொல்கிறார்

சனிக்கிழமை, 19 அக்டோபர் 2024      உலகம்
Putin 2023-03-02

Source: provided

மாஸ்கோ : உக்ரைன் உடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான காலக்கெடுவை அமைப்பது கடினமாக இருக்கும் என்று ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார். 

ரஷ்யாவில் பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாடு வருகிற 22-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடக்கிறது. இதில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கிறார்கள். இந்த நிலையில் ரஷ்ய அதிபர் புடின் தனது அதிகாரப்பூர்வ இல்லமான நோவோ-ஓகாரியோவோவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்திய பிரதமர் மோடி எனது நண்பர். அவருடன் சமீபத்திய பேச்சுவார்த்தைகளின் போது ரஷ்யா - உக்ரைன் போர் குறித்து மிகுந்த கவலை தெரிவித்தார். மோடியின் இந்த அக்கறைக்கு ரஷ்யா நன்றியுடன் இருக்கிறது. மோடியை சந்திக்கும் போது இந்திய திரைப்படங்களுக்கு மேலும் ஊக்கம் அளிப்பது குறித்து விவாதிக்கலாம்.

உக்ரைன் உடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான காலக்கெடுவை அமைப்பது கடினமாக இருக்கும். ரஷ்யாவை போரில் அமெரிக்கா மற்றும் நேட்டோ அமைப்பு தள்ளியது. ரஷ்ய ராணுவம் உலகின் மிகவும் போர்த்திறன் வாய்ந்த மற்றும் உயர் தொழில்நுட்பப் படைகளில் ஒன்றாக மாறியுள்ளது.

எங்களுக்கு எதிராக இந்தப் போரை நடத்துவதில் நேட்டோ சோர்வடையும். போரில் எங்களது கை ஓங்கி இருக்கிறது. நாங்கள் வெற்றி பெறுவோம். உக்ரைன் ராணுவம், துல்லியமான ஆயுத விநியோக அமைப்புகளை சொந்தமாக கையாள முடியாது. சமாதான பேச்சுவார்த்தையை நாங்கள் விரும்புகிறோம். 

ஆனால் அந்த முயற்சிகளில் இருந்து உக்ரைன் பின்வாங்குகிறது. பிரிக்ஸ் ஒருபோதும் யாருக்கும் எதிரானது கிடையாது. இதை பிரதமர் மோடி சரியாக தெரிவித்து உள்ளார். பிரிக்ஸ் அமைப்பு மேற்கத்திய நாடுகளுக்கு எதிரானது அல்ல. ரஷ்யா, அமெரிக்கா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இதற்கு காரணம் அமெரிக்கா தான். இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து