முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு மருத்துவமனைகளுக்கு விரைவில் பிசியோதெரபிஸ்டுகள் 47 பேர் தேர்வு

சனிக்கிழமை, 19 அக்டோபர் 2024      தமிழகம்
Doctor- 2023-07-13

Source: provided

சென்னை : அரசு மருத்துவமனைகளுக்கு விரைவில் 47 பிசியோதெரபிஸ்டுகள் நேரடி நியமன முறையில் தேர்வு செய்யப்பட இருப்பதாக மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் நேற்று  வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, 

 தமிழ்நாடு மருத்துவ சார்நிலை பணியின் கீழ் 47 பிசியோதெரபிஸ்டுகள் (கிரேடு-2) நேரடி நியமன முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பிசியோதெரபி பட்டதாரிகள் (பிபிடி) இதற்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 32 ஆகவும், எஸ்.சி., எஸ்.சி.-அருந்ததியர், எஸ்.டி., எம்.பி.சி., டி.என்.சி., பி.சி., பி.சி.-முஸ்லிம் ஆகிய இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 59 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் எனில் 42 வயது வரையும், முன்னாள் ராணுவத்தினர் என்றால் 50 வயது வரையும் விண்ணப்பிக்கலாம். 

ஆன்லைனில் (www.mrb.tn.gov.in) விண்ணப்பிக்க கடைசி நாள் நவம்பர் 7-ம் தேதி ஆகும்.  எழுத்துத் தேர்வு அடிப்படையில் பணி நியமனம் நடைபெறும். இதில் கட்டாய தமிழ்மொழி தகுதித்தாள் (10-ம் வகுப்புத்தரம்), பிசியோதெரபி பாட தேர்வு ஆகியவை இடம்பெற்றிருக்கும். 

தமிழ் மொழி தேர்வுக்கு 50 மதிப்பெண், பிசியோதெரபி தேர்வுக்கு 100 மதிப்பெண். இத்தேர்வுகள் கணினி வழி தேர்வுகளாக (கொள்குறிவகை) அமைந்திருக்கும். தமிழ் மொழி தேர்வில் 40 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறவேண்டும். 

தேர்வு கட்டணம், தேர்வு மையம், பாடத்திட்டம் உள்ளிட்ட கூடுதல் விவரங்களை மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் விரிவாக அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து