முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏர் இந்தியா விமானத்திற்கு திடீர் வெடிகுண்டு மிரட்டல் : ஜெய்ப்பூரில் அவசர தரையிறக்கம்

சனிக்கிழமை, 19 அக்டோபர் 2024      இந்தியா
Air-India 1

Source: provided

ஜெய்ப்பூர் : துபாய்க்கு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து ஜெய்ப்பூரில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் இருந்து 189 பயணிகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று துபாய் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து அதிகாலை 1.20 மணியளவில் ஜெய்ப்பூருக்கு திருப்பி விடப்பட்டது.

ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்ட விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் ஊழியர்கள் பாதுகாப்பாக இறக்கி விடப்பட்டனர். இதற்கிடையில் விமான நிலையத்தில் தயாராக இருந்த வெடிகுண்டு நிபுணர்கள் விமான முழுவதும் சோதனை மேற்கொண்டனர்.

இந்த இந்த சோதனையில் சந்தேகத்திற்குரிய வகையில் எந்த பொருளும் கிடைக்காததால் வெடிகுண்டு மிரட்டல் போலியானது என்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து