முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

190 போா்க் கைதிகளை பரிமாறி கொண்ட ரஷ்யா - உக்ரைன்

ஞாயிற்றுக்கிழமை, 20 அக்டோபர் 2024      உலகம்
Russia-Ukraine 2024-10-20

Source: provided

மாஸ்கொ : ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே சிறை பிடிக்கப்பட்டவர்களை விடுவிப்பது தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பலனாக இருதரப்பில்  இருந்தும் 190 போர்க் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.  

நேட்டோ என்ற நாடுகளின் கூட்டமைப்பில் சேருவதற்கு உக்ரைன் முடிவு செய்தது. இதனால் தனது எல்லைப் பகுதியில் பாதுகாப்பு குறைபாடு ஏற்படும் என நினைத்த ரஷ்யா, உக்ரைனை நேட்டோ அமைப்பில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. எனினும் உக்ரைன் நேட்டோ அமைப்புடன் இணைய தயாரானது. 

இதையடுத்து கடந்த 2022-ம் ஆண்டு உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்த தொடங்கியது. சுமார் 3 ஆண்டுகள் ஆன நிலையிலும் இந்த போர் முடிவுக்கு வந்தபாடில்லை. உக்ரைன் தலைநகர் கீவை குறிவைத்து ஆரம்பத்தில் ரஷ்யா தாக்குதல் நடத்தியது. இதற்கு உக்ரைன் தரப்பிலும் எதிர் தாக்குதல் நடத்தப்படுகிறது. 

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடைபெற்று வரும் இந்த போரில் இந்திய மாணவர்கள் உள்பட ஏராளமானவா்கள் கொல்லப்பட்டுள்ளனா். இந்த போரால் இரு நாடுகளில் உள்ள மக்கள் தொகையில் பெரிதளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே சிறைப்பிடிக்கப்பட்டவர்களை விடுவிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து தற்போது  ரஷ்யா தரப்பில் பிடித்து வைக்கப்பட்டு இருந்த 95 உக்ரைன் வீரர்கள் விடுவிக்கப்பட்டனா். 

இதே போல் ரஷ்ய வீரர்கள் 95 பேரையும் உக்ரைன் விடுவித்து உள்ளது. இது குறித்து ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

உக்ரைனுடன் நடைபெற்று வந்த பேச்சுவாா்த்தையில் ஏற்பட்ட உடன்பாட்டின் கீழ், எங்களிடம் இருந்த 95 உக்ரைன் போா்க் கைதிகள் அவா்களது தாய் நாட்டிடம் ஒப்படைக்கப்பட்டனா். 

அதற்குப் பதிலாக, அதே எண்ணிக்கையிலான ரஷ்ய போா்க் கைதிகள் எங்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டனா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. விடுவிக்கப்பட்ட போர்க்கைதிகள்  மகிழ்ச்சியாக சொந்த நாடுகளுக்கு திரும்பினர் . ஏற்கனவே ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே 203 பேர் விடுவிக்கப்பட்டு இருந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து