முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள இளம் தம்பதியருக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு அறிவுரை

ஞாயிற்றுக்கிழமை, 20 அக்டோபர் 2024      இந்தியா
chandrababu-naidu

Source: provided

அமராவதி : தென்னிந்தியாவில் முதியோர் அதிகரித்துள்ளனர். இளம் தம்பதிகள் கூடுதலாக குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக, செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த சந்திரபாபு நாயுடு கூறியதாவது, 

 தென் மாநிலங்களில் கருவுறுதல் விகிதம் குறைந்து வருகிறது. இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தகுதியுடையவர்கள் என்ற சட்டத்தை கொண்டு வர மாநில அரசு யோசித்து வருகிறது. அதிக குழந்தைகளை கொண்ட குடும்பங்களுக்கு அரசு கூடுதல் சலுகைகளை வழங்கக் கூடும்.

தென்னிந்தியாவில் முதியோர் அதிகரித்துள்ளனர். இளம் தம்பதிகள் கூடுதலாக குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும். முதியோர் அதிகரிப்பது தேசிய பிரச்னை. ஜப்பான், சீனா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகள் ஏற்கனவே முதியோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் பொருளாதார சுமையுடன் சிக்கித் தவிக்கின்றன. பிறப்பு விகிதம் தொடர்ந்து குறையும் பட்சத்தில் இந்தியாவையும் பாதிக்கும் சூழ்நிலை உள்ளது.

ஆந்திரா மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் உள்ள பல கிராமங்களில், வயதானவர்கள் மட்டுமே உள்ளனர். இளைய மக்கள் நகரங்களுக்குச் சென்று விட்டனர். இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்ள விரும்பும் தம்பதிகளுக்கு ஊக்கத்தொகைகள் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து