முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அயோத்தியில் தீப திருவிழா: சரயு நதிக்கரையில் 25 லட்சம் விளக்குகள் ஏற்ற திட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 20 அக்டோபர் 2024      இந்தியா
Ayodhya 2024-10-20

Source: provided

லக்னோ : அயோத்தியில் தீபத் திருவிழாவிற்காக சரயு நதிக்கரையில்  25 லட்சம் விளக்குகள் ஏற்ற திட்டமிடப்பட்டுள்ளது. 

உத்தர பிரதேச மாநில முதல்வராக யோகி ஆதித்யநாத் கடந்த 2017-ம் ஆண்டு பதவியேற்றவுடன், தீபாவளி பண்டிகைக்கு முதல் நாள், தீபோத்ஸவ் எனப்படும் தீபத் திருவிழாவை அறிவித்தார். 

அந்த ஆண்டு, அயோத்தி நகரின் சரயு நதிக்கரையில் 51 ஆயிரம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன. தொடர்ந்து 2019-ம் ஆண்டு 4.10 லட்சம் விளக்குகள், 2020-ம் ஆண்டு 9 லட்சத்துக்கும் அதிகமான விளக்குகள் ஏற்றப்பட்டன. 

கடந்த 2022-ம் ஆண்டு அயோத்தியில் 15 லட்சத்திற்கும் அதிகமான அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு கின்னஸ் சாதனை படைக்கப்பட்ட நிலையில், 2023-ம் ஆண்டு 22.3 லட்சம் விளக்குகள் ஏற்றப்பட்டு அந்த சாதனை முறியடிக்கப்பட்டது. 

இந்நிலையில், இந்த ஆண்டு தீபத் திருவிழாவிற்கு அயோத்தியில் 25 லட்சம் விளக்குகள் ஏற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி சரயு நதிக்கரையில் உள்ள 55 படித்துறைகளிலும் விளக்குகள் ஏற்றப்பட உள்ளது. 

இந்த தீபத் திருவிழாவில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்க உள்ளதாகவும், திருவிழாவிற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து