முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கடும் போட்டியை சந்திக்கும் : பா.ஜ.க. வேட்பாளர் நவ்யா உறுதி

ஞாயிற்றுக்கிழமை, 20 அக்டோபர் 2024      இந்தியா
Navya-Haridas 2024-10-20

Source: provided

கோழிக்கோடு : வயநாடு லோக்சபா தொகுதியில் நடக்கவுள்ள இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி கடும் போட்டியை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்  என பா.ஜ.க. வேட்பாளர் நவ்யா ஹரிதாஸ் நேற்று தெரிவித்தார். 

2024 பார்லிமென்ட் தேர்தலில் வயநாடு, ரேபரேலி இரண்டு தொகுதியில் போட்டியிட்டு வென்ற ராகுல் காந்தி, வயநாடு தொகுதி எம்.பி., பதவியை ராஜினாமா செய்தார். அந்த தொகுதிக்கு  நவம்பர் 13-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. 

அதில், காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து பா.ஜ.க. சார்பில் நவ்யா ஹரிதாஸ் போட்டியிடுவார் என  அக்கட்சி அறிவித்துள்ளது. இந்த நிலையில் நேற்று பா.ஜ.க. வேட்பாளர் நவ்யா ஹரிதாஸ் கூறியதாவது:

ராகுல், ரேபரேலியில் வெற்றி கிடைத்தவுடன்  வயநாடு தொகுதி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டார். வயநாடு தொகுதியை கை விட்டுவிட்டார். அங்கு சில மாதங்களுக்கு முன் கடும் நிலச்சரிவு ஏற்பட்டபோது, தொகுதி உறுப்பினராக இருந்த ராகுல், பார்லிமென்டில் மக்கள் பிரச்னை குறித்து பேசவில்லை.

ஆகவே, மக்கள் கடும் எதிர்ப்பில் உள்ளனர். இந்நிலையில், எதிர்தரப்பில் போட்டியிடும் காங்கிரசும் அதன் வேட்பாளராகிய பிரியங்காவும் கடும் போட்டியை சந்தித்து ஆக வேண்டும். பிரியங்கா வெற்றி பெற்றால் இதே போன்ற நிலைதான் ஏற்படும்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக, வயநாடு மக்களை, எம்.பி.,யாக இருந்த ராகுல், அரிதாகவே சந்தித்துள்ளார். மக்களின் பிரச்னைகளை கேட்கவில்லை. நான் கோழிக்கோடு மாநகராட்சியின் உறுப்பினராக இரண்டு முறை இருந்துள்ளேன். இது எனக்கு முதல் லோக்சபா தேர்தல். நான் வெற்றி பெற்றால் மக்கள் பணியை சிறப்பாக செய்வேன். இவ்வாறு நவ்யா ஹரிதாஸ் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து