முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேலம் அருகே ஏரியில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு

ஞாயிற்றுக்கிழமை, 20 அக்டோபர் 2024      தமிழகம்
Salem 2024-10-20

Source: provided

சேலம் : சேலம் அருகே ஏரியில் மூழ்கி ஒரே குடும்பத்தை  சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

சேலம் மாவட்டம் நங்கவள்ளி அடுத்த கொத்திகுட்டை ஏரியில் துணி துவைப்பதற்காக அப்பகுதியை சேர்ந்த 2 பெண்கள் உட்பட மூன்று பேர் சென்றுள்ளனர்.  அப்போது எதிர்பாராதவிதமாக 3 பேரும் ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்று மூழ்கினர். அவர்களை காப்பாற்றுவதற்காக அப்பகுதியை சேர்தவர்கள் வருவதற்குள் 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். 

நீரில் மூழ்கி உயிரிழந்த ரேவதி, சிவஸ்ரீ, திவ்ய தர்ஷினி ஆகிய 3 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். அவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. 

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக, வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். ஏரியில் மூழ்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து