முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் ஆன்மிகமும், அரசியலும் நிச்சயம் கலக்கும்: தமிழிசை பேட்டி

ஞாயிற்றுக்கிழமை, 20 அக்டோபர் 2024      தமிழகம்
Tamilsai 2024-05-02

Source: provided

சென்னை : தமிழகத்தில்  ஆன்மிகமும், அரசியலும் நிச்சயம் கலக்கும் என்று தமிழிசை  சவுந்தரராஜன் தெரிவித்தார். 

சென்னை ஆலந்தூரில் புதுச்சேரி முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது,

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், அவர் திருவண்ணாமலையில் கிரிவலம் போகவில்லை. சரிவலம் போனோம் என்று சொல்லியிருக்கிறார். 

எதுவாக இருந்தாலும் சரி, இடம் போய்க் கொண்டிருந்தவகள் இன்று வலம் போய்க் கொண்டிருக்கிறார்கள். அதுவே ஆன்மிகத்தின் மிகப்பெரிய வெற்றிதான். அதே போல் என்னைப்பற்றி சொல்லும்போது, இவர்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் என்று சொல்கிறார். 

நான் என் அப்பா தோளிலோ, தாத்தா தோளிலோ ஏறி வரவில்லை. நானாக தட்டுத் தடுமாறி, தடம் மாறாமல் மக்களை சந்தித்து வருகிறேன். என்றைக்காவது ஒருநாள் எங்களுக்கு வெற்றி கிடைக்கும். 

தமிழகத்தில் ஆன்மிகமும், அரசியலும் கலக்கவே கலக்காது என்று சொல்கிறார். நான் இன்று சவால் விடுகிறேன். தமிழகத்தில்  ஆன்மிகமும், அரசியலும் நிச்சயம் கலக்கும். அண்ணா வளர்த்தது தமிழ் அல்ல, ஆண்டாள் வளர்த்தது தமிழ். பெரியார் வளர்த்தது தமிழ் அல்ல, பெரியாழ்வார் வளர்த்தது தமிழ். இவர்கள் இருவரும் பேசிய சமூக நீதியை அண்ணாவும், பெரியாரும் பேசவில்லை.

எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான் எங்கள் கொள்கை என்று கூறுகிறார். அது உண்மையென்றால், உதயநிதி ஸ்டாலின் இந்த வயதில் எப்படி துணை முதல்வர்  ஆனார்? எல்லோருக்கும் எல்லாம் என்றால் எல்லோரையும் நீங்கள் பரிசீலனை செய்திருக்க வேண்டுமே?. இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து