முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அணியில் வாஷிங்டன் சுந்தர்

ஞாயிற்றுக்கிழமை, 20 அக்டோபர் 2024      விளையாட்டு
Vashington-Sunder 2023-02-2

Source: provided

நியூசிலாந்துக்கு எதிரான எஞ்சிய டெஸ்ட் தொடர்களுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் முதல் டெஸ்ட் போட்டிக்கான அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் அப்படியே இடம் பெற்றுள்ளனர். மேலும், இந்த அணியில் தமிழக ஆல் ரவுண்டரான வாஷிங்டன் சுந்தரும் சேர்க்கப்பட்டுள்ளார். சமீபத்தில் ரஞ்சி டிராபில் சிறப்பாக செயல்பாட்டை வெளிப்படுத்தியதன் காரணமாக அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்திய அணி விவரம்; ரோகித் சர்மா (கேப்டன்), ஜஸ்ப்ரீத் பும்ரா (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, கே.எல்.ராகுல், சர்பராஸ் கான், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரெல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ்ம் ஆகாஷ் தீப், வாஷிங்டன் சுந்தர். 

________________________________________________________________________________________

சாதனை படைத்த ஜிம்பாப்வே

டி20 உலகக் கோப்பை தொடர் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த தொடரில் கலந்து கொள்வதற்காக பல அணிகள் குவாலிபையர் சுற்றில் விளையாடி வருகின்றனர். அந்த வகையில் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த அணிகள் தற்போது குவாலிபையரில் விளையாடி வருகிறது. அதில் ஜிம்பாப்வே, கென்யா, ருவாண்டா, காம்பியா, மொசாம்பிக், சீஷெல்ஸ் ஆகிய அணிகள் தங்களுக்குள் மோதுகின்றனர். இதில் நேற்று நடந்த போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் சீஷெல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சீஷெல்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி 286 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பிரையன் பென்னட் 91, டி மருமணி 86 ரன்கள் எடுத்தனர். இதனையடுத்து களமிறங்கிய சீஷெல்ஸ் அணி 6.1 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 18 ரன்கள் மட்டுமே எடுத்தது. அப்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி ஜிம்பாப்வே அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. முன்னதாக இந்த போட்டியில் ஜிம்பாப்வே அணி 286 ரன்கள் குவித்ததன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் அதிக ரன்கள் குவித்த 3-வது என்ற சாதனையை ஜிம்பாப்வே அணி படைத்துள்ளது. இந்த பட்டியலில் முதல் இடத்தில் (314) நேபாள அணி உள்ளது. 2-வது இடத்தில் (297) இந்திய அணி உள்ளது.

________________________________________________________________________________________

சி.எஸ்.கே.வை புகழ்ந்த ரவீந்திரா 

இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்துக்காக சிறப்பாக பேட்டிங் செய்த ரச்சின் ரவீந்திராவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த வெற்றியால் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என நியூசிலாந்து அணி முன்னிலை பெற்றுள்ளது. 2வது டெஸ்ட் வரும் 26ம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில், இந்த ஆட்டத்தில் ஆட்டநாயகன் விருது வென்ற ரச்சின் ரவீந்திரா அளித்த பேட்டியில் கூறியதாவது,

பெங்களூரு நல்ல நகரம். இங்கே பேட்டிங் செய்வதற்கு பிட்ச் நன்றாக இருந்தது. பார்ம் மற்றும் புட் ஒர்க் ஆகிய இரண்டிலும் தயாரானேன். என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவு இருக்கும் வரை அனைத்தும் சிறப்பாக செல்லும். இந்த தொடருக்காக தயாரானது உதவி செய்தது. அதற்காக நான் கருமண், செம்மண் போன்ற வித்தியாசமான பிட்ச்களில் வித்தியாசமான பவுலர்களுக்கு எதிராக பயிற்சி எடுக்க முயற்சித்தேன். சென்னையில் அந்த உதவிகள் கிடைத்ததற்கு அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். சென்னையில் தரமான நேரத்தை செலவிட்டேன். அதற்காக சி.எஸ்.கே-வுக்கு நன்றியுடையவனாக இருக்கிறேன். அது எனக்கு உதவியது. பெங்களூருவில் எங்களுடைய குடும்பத்தின் ஆதரவு கிடைத்தது நன்றாக இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

________________________________________________________________________________________

வெற்றி குறித்து டாம் லாதம்

முதல் டெஸ்ட் போட்டி வெற்றி குறித்து நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம் அளித்த பேட்டியில் கூறியதாவது, உண்மையிலேயே இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் நாங்கள் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்தோம். இந்த போட்டியில் டாசில் தோல்வியை சந்தித்தது எங்களுக்கு சாதகமாக அமைந்தது. நாங்கள் டாசில் வெற்றி பெற்றிருந்தாலும் முதலில் பேட்டிங்கை தான் தேர்வு செய்திருப்போம். ஆனால் டாசில் தோற்று முதலில் பந்து வீசிய போது எங்களது பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக பந்துவீசி எங்களை போட்டியின் ஆரம்பத்திலேயே முன்னுக்கு கொண்டு வந்தனர்.

இந்த போட்டியின் மூன்றாவது இன்னிங்ஸில் இந்திய அணி நிச்சயம் வலுவான கம்பேக் கொடுக்கும் என்பது நாங்கள் எதிர்பார்த்தோம். அந்த வகையில் இந்திய அணியும் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தது. இருந்தாலும் எங்களது பந்துவீச்சாளர்கள் தொடர்ச்சியாக சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியதால் இந்திய அணியை 100 ரன்களுக்கு சுருட்ட முடிந்தது. இந்த போட்டியில் பந்துவீச்சாளர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட பேட்டிங்கில் ரச்சின் ரவீந்திரா அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரது ஆட்டம் கடந்த சில மாதங்களாகவே வேறு லெவலில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

________________________________________________________________________________________

டிராவிஸ் ஹெட் விலகல்

பாகிஸ்தான் அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் முதலில் நடைபெறுகிறது. முதல் ஒருநாள் போட்டி நவம்பர் 4-ம் தேதி மெல்போர்னில் தொடங்குகிறது. இந்நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் டிராவிஸ் ஹெட் விளையாடப் போவதில்லை என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் இந்தியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் மீண்டும் அணியுடன் இணைவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வட்டாரங்கள் தரப்பில் தெரிவித்திருப்பதாவது, பாகிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி அடுத்த மாதம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடரில் இருந்து டிராவிஸ் ஹெட்டுக்கு ஓய்வு அளிக்கப்படுகிறது. ஒருநாள் தொடரைத் தொடர்ந்து, நடைபெறும் டி20 தொடரிலும் டிராவிஸ் ஹெட் அணியில் இடம்பெறமாட்டார். தொடர்ச்சியாக ஆஸ்திரேலிய அணிக்காக ஓய்வின்றி விளையாடி வரும் டிராவிஸ் ஹெட், அவருடைய குடும்பத்தினருடன் இந்த ஓய்வு நாள்களை செலவிடவுள்ளார். அவருக்கு இரண்டாவது குழந்தை பிறக்கவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து