முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கமலா ஹாரிசுக்கு டைட்டானிக் பட நாயகன் லியானார்டோ ஆதரவு

ஞாயிற்றுக்கிழமை, 27 அக்டோபர் 2024      உலகம்
Kamala-Titanic 2024-10-27

Source: provided

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், ஆஸ்கார் விருது பெற்ற ஹாலிவுட் நட்சத்திரம் லியானார்டோ டிகாப்ரியோ ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா அதிபர் தேர்தல் வரும் 5-ம் தேதி நடக்கிறது. குடியரசுக் கட்சி சார்பில் அமெரிக்கா முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் இரண்டு அதிபர் வேட்பாளர்களும் சூறாவளி பிச்ரசாரம் செய்து வருகின்றனர்.  

இந்நிலையில், ஆஸ்கார் விருது பெற்ற ஹாலிவுட் நட்சத்திரம் டைட்டானிக் பட நாயகன் லியானார்டோ டிகாப்ரியோ ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில், லியானார்டோ டிகாப்ரியோ வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது, 

பருவநிலை மாற்றம் கவலை அளிக்கிறது. தவறு செய்யாதீர்கள்: இந்த இயற்கைக்கு மாறான பேரழிவுகள் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டவை. நமது பொருளாதாரம், நமது கிரகம் மற்றும் நம்மைக் காப்பாற்ற ஒரு தைரியமான படி முன்னேற வேண்டும். 

அதனால்தான் கமலா ஹாரிசுக்கு ஓட்டளிக்க விரும்புகிறேன். வரும் 5-ம் தேதி கமலா ஹாரிசுக்கு ஓட்டளிக்க என்னுடன் சேருங்கள். 2050-ம் ஆண்டிற்குள் நிகர பூஜ்ய உமிழ்வை எட்டுவத்கான கமலாவின் லட்சிய இலக்குகளை பாராட்டுகிறேன். இவ்வாறு அவர் அந்த வீடியோ பதிவில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து