முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தல் முடிவால் அமெரிக்காவின் போக்கில் எந்த மாற்றம் இருக்காது: ஆஸி.யில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு

புதன்கிழமை, 6 நவம்பர் 2024      உலகம்
Jaishankar 2024-11-06

கான்பெரா, அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவால் அதன் கொள்கை ரீதியிலான போக்கில் பெரிய மாற்றம் இருக்கப்போவதில்லை என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் கான்பெராவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜெய்சங்கர், "அமெரிக்க கொள்கையின் நீண்டகால போக்கு என்று நான் கூறிவரும் விஷயத்தை அங்கு நடைபெற்றுவரும் தேர்தல் மாற்றியமைக்கும் என்று நான் நம்பவில்லை. அநேகமாக, முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவில் இருந்து தொடங்கி அமெரிக்கா அதன் சர்வதேச கடமைகள் குறித்து மிகவும் எச்சரிக்கையுடன் உள்ளது. உதாரணமாக அமெரிக்கா தனது துருப்புக்களை (ராணுவம்) நிலைநிறுத்துவதில் தயக்கம் காட்டுகிறது.

அதிபர் ஜோ பைடன் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கத் துருப்புகளைத் திரும்பப் பெற்றார். அதிபர் ட்ரம்ப் இந்த விஷயத்தில் இன்னும் தெளிவாகவும் வெளிப்படையாகவும் இருக்கலாம். அமெரிக்காவின் முந்தைய ஆதிக்கம் மற்றும் தாராளவாத மனப்பான்மை இனியும் தொடராத ஓர் உலகத்துக்கு நாம் தயாராக வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.” என்று தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்களுடனான விவாத நிகழ்வில் ஜெய்சங்கர் இதனைத் தெரிவித்தார். மூன்று நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களும், தங்களின் நாடுகள் தாங்கள் விரும்பும் உலகளாவிய சூழலை உருவக்க முன்வர வேண்டும் என்று தெரிவித்தனர். ஒருவிதமான ஒருமித்த கூட்டு நடவடிக்கைகளை உருவாக்குவதில் இன்று நாம் ஆர்வமாக உள்ளோம் என்று ஜெய்சங்கர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து