முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொழில் மோசடி விவகாரம்: டோனிக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

புதன்கிழமை, 13 நவம்பர் 2024      விளையாட்டு
Dhoni 2024 11 13

Source: provided

ராஞ்சி : தொழில் மோசடி விவகாரம் தொடர்பாக டோனிக்கு ஜார்க்கண்ட் ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

குற்றப்பத்திரிகை... 

பிரபல நட்சத்திர கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் டோனியின் முன்னாள் தொழில்முறை கூட்டாளிகளான மிஹிர் திவாகர் மற்றும் சவுமியா தாஸ் ஆகியோர் தொடர்ந்த வழக்கில் ஜார்கண்ட் ஐகோர்ட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. திவாகர் மற்றும் தாஸ் ஆகியோர் ஆர்கா ஸ்போர்ட்ஸ் அண்ட் மேனேஜ்மென்ட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர்கள் ஆவர். அவர்கள் டோனியின் பெயரைப் பயன்படுத்தி கிரிக்கெட் அகாடமிகளை திறக்க ஒப்பந்தம் செய்திருந்தனர். அவர்கள் தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி, இருவரின் மீதும் டோனி ஜனவரி 5ம் தேதி ராஞ்சியில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்.

ஐகோர்ட் உத்தரவு...

இதுதொடர்பான புகார் மனுவில், 2021ம் ஆண்டில் அவர்களுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்த பிறகும், இருவரும் தனது பெயரைப் பயன்படுத்தி கிரிக்கெட் அகாடமிகளைத் தொடர்ந்து திறந்து, ரூ.15 கோடி மோசடி செய்ததாக டோனி அதில் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் இந்த வழக்கை எதிர்த்து ஜார்க்கண்ட் ஐகோர்ட்டில் திவாகரும், தாசும் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் டோனி நேரில் ஆஜராகி தனது நிலைப்பாட்டை விளக்க வேண்டும் என்று ஜார்கண்ட் ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து