எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருவனந்தபுரம், மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. நாளை 16-ம் தேதி அதிகாலை 3 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் தொடங்குகின்றன.
பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோலிலில் இவ்வருட மண்டல காலம் வரும் 16-ம் தேதி தொடங்குகிறது. இதை முன்னிட்டு இன்று மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. தந்திரிகள் கண்டரர் ராஜீவரர், பிரம்மதத்தன் ஆகியோர் முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி கோவில் நடையினை திறந்து வைக்கிறார்.
இதன்பின்னர் நெய் தேங்காய்களை எரிக்கும் ஆழியில் தீ மூட்டப்படும். தொடர்ந்து புதிய மேல்சாந்திகள் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி நடைபெறும். சபரிமலை கோயில் மேல்சாந்தியாக கொல்லத்தைச் சேர்ந்த அருண்குமார் நம்பூதிரியும், மாளிகைப்புரம் மேல்சாந்தியாக கோழிக்கோட்டை சேர்ந்த வாசுதேவன் நம்பூதிரியும் பொறுப்பேற்பார்கள். இன்று இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும்.
கார்த்திகை 1-ம் தேதியான நாளை (16-ம் தேதி) அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும். புதிய மேல்சாந்திகளான அருண்குமார் நம்பூதிரி சபரிமலை கோயில் நடையையும், வாசுதேவன் நம்பூதிரி மாளிகைப்புரம் கோயில் நடையையும் திறப்பார்கள்.
அடுத்த ஒரு வருடத்திற்கு இவர்களது தலைமையில் தான் சபரிமலை மற்றும் மாளிகைப்புரம் கோயில்களின் முக்கிய பூஜைகள் நடைபெறும். கடந்த 2018-ல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அந்த வருடம் முதல் பம்பையில் வாகனங்களை நிறுத்த அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் இந்த மண்டல காலத்திலும் பம்பை ஹில்டாப் மற்றும் சக்குபாலம் ஆகிய இடங்களில் வாகனங்களை நிறுத்த கேரள ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது.
சபரிமலைக்கு பக்தர்கள் கூட்டத்தை தவிர்க்க ஆன்லைன் முறையில் தினசரி 70 ஆயிரம் பேரும், ஸ்பாட் புக்கிங் முறையில் தினசரி 10 ஆயிரம் பேர் வரையிலும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவுள்ளனர். இதற்காக https;//sabarimalaonline.org என்ற இணையதளத்திற்குள் சென்று தேதி மற்றும் நேரம் வாரியாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.
முன்பதிவு துவங்கிய இன்று 15-ம் தேதி முதல் 23-ம் தேதி வரையிலும் தற்போது முன்பதிவு முடிந்துள்ளது. இதேபோல் வரும் 25, 28 மற்றும் 29 ஆகிய தேதிகளிலும் முன்பதிவு முடிந்து விட்டது. அதே நேரம் ஸ்பாட் புக்கிங் முறையில் உடனுக்குடன் பதிவு செய்து சபரிமலை சன்னிதானம் செல்லலாம்.
சபரிமலை பக்தர்கள் வசதிக்காக பத்தனம்திட்டா மாவட்ட நிர்வாகம் சார்பில் சுவாமி சாட் போட் என்ற செயற்கை நுண்ணறிவு செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான லோகோவை கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ளார். இதில் சபரிமலை கோயில் நடைதிறப்பு, பூஜை நேரங்கள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் ஆகியவை குறித்த விவரங்களை தமிழ், மலையாளம், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய 6 மொழிகளில் தெரிந்து கொள்ளலாம். ஸ்மார்ட் போன் இன்டர்பேஸ் மூலம் இதை பயன்படுத்த முடியும்.
சபரிமலையில் இந்த மண்டல காலத்தின் முதல் நாளில் இருந்தே 18 மணி நேரம் கோவில் நடை திறந்திருக்கும். தினமும் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் ஒரு மணிக்கு நடை சாத்தப்படும். மீண்டும் மாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 11 மணிக்கு நடை சாத்தப்படும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 2 weeks ago |
-
சபரிமலையில் மண்டல கால பூஜைக்காக ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது
14 Nov 2024திருவனந்தபுரம், மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-11-2024.
14 Nov 2024 -
குடிநீர் கட்டணங்களுக்கு பசுமை வரி: கர்நாடக அரசு புதிய திட்டம்
14 Nov 2024பெங்களூரூ, ஆறுகளை பாதுகாக்கும் நடவடிக்கையாக குடிநீர் கட்டணங்களுடன் பசுமை வரியை விதிக்க கர்நாடக வனத்துறை முடிவு செய்துள்ளது.
-
தகுதியுள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்: தூத்துக்குடியில் துணை முதல்வர் உதயநிதி பேச்சு
14 Nov 2024தூத்துக்குடி, தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்தார்.
-
ஜெயங்கொண்டம் அருகே ரூ.1000 கோடி மதிப்பில் காலணி உற்பத்தி தொழிற்சாலை: முதல்வர் ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டுகிறார்
14 Nov 2024திருச்சி, ஜெயங்கொண்டம் அருகே உள்ள மகிமைபுரத்தில் 130 ஏக்கர் பரப்பளவில் செயல்பட்டு வரும் சிப்காட் தொழில் வளாகத்தில், தைவான் நாட்டை சேர்ந்த டீன் ஷூஸ் குழுமம் ரூ.1,000 கோட
-
ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ சென்னை அப்பல்லோவில் அனுமதி
14 Nov 2024சென்னை, ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுடன் வருபவர்களுக்கு டேக் அறிமுகப்படுத்த முடிவு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
14 Nov 2024சென்னை, நோயாளிகளுடன் வருபவர்களுக்கு சிவப்பு, மஞ்சள், பச்சை, நீல வண்ண டேக் அறிமுகப்படுத்தப்படும் என்று மருத்துவத்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரம
-
தங்கம் விலை தொடர் சரிவு: சவரனுக்கு ரூ.880 குறைந்தது
14 Nov 2024சென்னை: தங்கம் விலை நேற்றும் சவரனுக்கு ரூ.880 குறைந்து விற்பனையானது.
-
ஹிஸ்புல்லா நடத்திய தாக்குதலில் 6 இஸ்ரேல் ராணுவ வீரர்கள் பலி
14 Nov 2024பெய்ரூட், ஹிஸ்புல்லா தாக்குதலில் இஸ்ரேல் ராணுவத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர்.
-
அமெரிக்க உளவுத்துறை இயக்குனராக துளசி கபார்டை நியமித்தார் டிரம்ப்
14 Nov 2024வாஷிங்டன், அமெரிக்க உளவுத்துறை இயக்குனராக முன்னாள் எம்.பி. துளசி கபார்டை நியமனம் செய்துள்ளார் டிரம்ப்.
-
இளங்கலை படிப்பை முன்கூட்டியே முடிக்கும் புதிய முறை வரும் கல்வி ஆண்டில் அமல்: யு.ஜி.சி.
14 Nov 2024சென்னை, இளங்கலை பட்டப்படிப்பை முன்கூட்டியே படித்து முடிக்கும் புதிய முறை வரும் கல்வி ஆண்டில் அமல்படுத்தப்படும் என யு.சி.ஜி.
-
அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் 3-ம் கட்டமாக கள ஆய்வு ரூ.1000 கோடி மதிப்பில் சிப்காட் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டுகிறார்
14 Nov 2024அரியலூர்: அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் 3-ம் கட்டமாக கள ஆய்வு மேற்கொள்கிறார்.
-
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து
14 Nov 2024சென்னை, நாளைய உலகின் சிற்பிகளாகிய குழந்தைகள் அனைவருக்கும் குழந்தைகள் தின வாழ்த்துகள் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார். 
-
ஜாமின் மனு தள்ளுபடி எதிரொலி: நடிகை கஸ்தூரியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைப்பு
14 Nov 2024சென்னை, மதுரை ஐகோர்ட் கிளையில் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக உள்ள நடிகை கஸ்தூரியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
-
ஷிப்ட் முறை தேர்வு அறிவிப்புக்கு எதிர்ப்பு: உ.பி. அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு எதிராக தொடரும் மாணவர்கள் போராட்டம்:
14 Nov 2024லக்னோ, ஷிப்ட் முறை தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து உத்தரப்பிரதேசத்தில் அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு மாணவர்களின் போராட்டம் 4-வது நாளாக தொடர்கிறது.
-
144 தடை உத்தரவு மீறல் வழக்கு: இம்ரான் கானை விடுதலை செய்து இஸ்லாமாபாத் கோர்ட் உத்தரவு
14 Nov 2024இஸ்லாமாபாத், 144 தடை உத்தரவு விதிமீறல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
-
ராஜஸ்தானில் தேர்தல் பணியில் இருந்த துணை கலெக்டரை தாக்கிய சுயேச்சை வேட்பாளர் கைது
14 Nov 2024ஜெய்ப்பூர், ராஜஸ்தானில் தேர்தல் பணியில் இருந்த துணை கலெக்டரை சுயேச்சை வேட்பாளர் கன்னத்தில் அறைந்தார்.
-
பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை: எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்
14 Nov 2024கிருஷ்ணகிரி, நான் கூட்டணிக்கு வருமாறு வேண்டுகோள் விடுப்பது மற்ற கட்சிகளுக்கு தான். பா.ஜ.க.
-
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
14 Nov 2024சென்னை, தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
குழந்தைகள் தினம்: முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து
14 Nov 2024சென்னை, குழந்தைகள் தினத்தையொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பந்தல்கால் நடும் நிகழ்ச்சி: ஜனவரி 10-ல் சொர்க்கவாசல் திறப்பு
14 Nov 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஆயிரங்கால் மண்டபம் அருகே பந்தல் கால் நடும் நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது.
-
மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு: தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவை ஏற்றது சுப்ரீம் கோர்ட்டு
14 Nov 2024புது டெல்லி, மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.
-
பிரதமர் மோடிக்கு உயரிய தேசிய விருது: டொமினிகா அரசு அறிவிப்பு
14 Nov 2024புது டெல்லி, காமன்வெல்த் ஆப் டொமினிகா தனது உயரிய தேசிய விருதான டொமினிகா விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது.
-
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய திருத்தம் செய்ய சிறப்பு முகாம்
14 Nov 2024சென்னை: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய 4 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
-
தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் துணை முதல்வர் உதயநிதி திடீர் ஆய்வு
14 Nov 2024தூத்துக்குடி: தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.